இரவு அழைப்பிற்கு ”நோ” சொன்னதால் நடிகை வித்யாபாலனை பழிவாங்கிய அமைச்சர் !
பாலிவுட் முன்னணி நடிகர் வித்யா பாலன் நடிக்கும் ‘ஷெர்னி’ படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் அரைகுறையாக நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய பிரதேச வெளியுறவு அமைச்சர் விஜய் ஷாவின் விருந்து அழைப்பை வித்யாபாலன் ஏற்க மறுத்ததால் இவ்வாறு நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாராவைப் போலவே இந்தி திரையுலகில் கெத்தான ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை வித்யா பாலன். எந்த விதமான விமர்சனங்கள் வந்தாலும் அதற்காகவெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாதவர். சில்க் ஸ்மித்தாவாக இவர் நடித்த ‘தி டர்ட்டி பிக்சர்’ படம் இவருக்கு மாபெரும் புகழை வாங்கிக்கொடுத்து.

தமிழ் சினிமா பக்கமே வெகுநாட்களாக தலைகாட்டாமல் இருந்த வித்யா பாலன் நடிகர் அஜித் மேல் உள்ள மரியாதையால் முதல் முறையாக இறங்கி வந்து, நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் மனைவியாக நடித்திருந்தார்.

கொரோனா லாக்டவுனுக்கு பிறகு தற்போது வித்யாபாலன் ஷெர்னி என்ற படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இதன் படப்பிடிப்பு மத்தியபிரதேசம் பாலகாத் வனப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக நடந்து வந்தது.இந்நிலையில் அப்படப்பிடிப்பு தளத்திற்கு மாநில அமைச்சர் விஜய் ஷா திடீரெனெ அண்மையில் ஒருநாள் வந்துள்ளார். அப்போது வித்யாபாலனுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த அமைச்சர் அவரை இரவு உணவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அதில் விருப்பம் இல்லாத வித்யாபாலன் நாசுக்காக ”இப்போது வேண்டாம் மகாராஷ்டிரா வரும்போது பார்க்கலாம்” என கூறியுள்ளார்.
இதனால் கடுப்பான அமைச்சர், படப்பிடிப்புக்கு லாக் போட்டபடி கமுக்கமாக சில வேலைகளை பார்த்துள்ளார். அப்புறம் என்ன , படப்பிடிப்பை நடத்த வனத்துறை திடீரென அனுமதி மறுத்துள்ளது.மேலும் படப்பிடிப்பிற்காக வாகனங்களையும் உள்ளே அனுமதிக்கவில்லையாம் . இதனால் படப்பிடிப்பு மொத்தமாக நிறுத்தப்பட்டு பேக்அப் செய்யப்பட்டது.
”டின்னருக்கு” நோ சொன்னதெல்லாம் ஒரு குத்தமாயா ..!?