டிடெக்டிவ்வாக நடித்துள்ள வித்யபாலன்.. ‘நீயட்’ டிரெய்லர் வெளியீடு

வித்யபாலன் நடிப்பில் உருவாகியுள்ள ‘நீயட்’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் வித்யாபாலன். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த வகையில் ‘மிஷன் மங்கல்’ படத்திற்கு பிறகு ‘நீயட்‘ (Neeyat) படத்தில் நடித்துள்ளார்.
பிரபல இயக்குனர் அனு மேனன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ‘சகுந்தலா தேவி’ படத்திற்கு பிறகு அனுமேனனும், வித்யாபாலனும் இரண்டாவது முறையாக இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளனர். வித்யபாலனுடன் இணைந்து இந்த படத்தில் ராம் கபூர், ராகுல் போஸ், நீரஜ் கபி, அம்ரிதா பூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் வரும் ஜூலை 7-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டிரெயலர் வெளியிடப்பட்டுள்ளது. துப்பறியும் கதைக்களம் கொண்ட இந்த படத்தில் டிடெக்டிவ் மீரா ராவ் வேடத்தில் நடிகை வித்யபாலன் நடித்துள்ளார். கொலையை தொடர்ந்து நடக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் வகையிலான இருக்கும் இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.