முனீஸ்காந்த் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!
மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதி முனீஸ் காந்த் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழில் வெளியான மாநகரம் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து இந்தப் படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கவுள்ளார். ஷிபு தமீன்ஸ் தயாரிக்கிறார்.
இந்த ரீமேக்கில் விக்ராந்த் மாசே, ஹரிதுன் ஹாரே ஆகியோர் நடிக்கின்றனர். நடிகர் விஜய் சேதுபதியும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு வந்தது.
தற்போது மாரகம் படத்தில் முனீஸ்காந்த் நடித்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். கையில் ஒரு துப்பாக்கியுடன் சிறுவனை பிடித்திருக்கும் அவரது புகைப்படம் வெளியாகியுள்ளது. மாநகரம் படத்தில் முனீஸ்காந்தின் கதாபாத்திரம் நகைச்சுவையாக அமைக்கப்பட்டிருக்கும். தற்போது விஜய் சேதுபதி இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பது கவனம் பெற்றுள்ளது.