திருமண நாளை கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடிய ‘விராட்- அனுஷ்கா’ தம்பதி.
1702365289751

நட்சத்திர தம்பதிகளாக வலம்வரும் விராட் கோலி- அனுஷ்கா ஷர்மா நேற்று தங்களது 6ஆம் ஆண்டு திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
காதலித்து கடந்த டிசம்பர் 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட தம்பதி விராட் கோலி- அனுஷ்கா ஷர்மா. இந்த தம்பதிக்கு வாமிகா என்ற மகள் உள்ளார். ஒருவருக்கு ஒருவர் பக்கபலமாக இருந்து தங்கள் துறைகளில் ஜொலித்து வரும் இந்த தம்பதிக்கு ஈராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் தங்களது 6ஆம் ஆண்டு திருமண நாளை கேக் வெட்டி மகிழ்ச்சியாக லண்டனில் கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.