விரைவில் புற்றுநோயை வெல்வேன்… சஞ்சய் தத்தின் சலூன் கடை வைரல் வீடியோ!
நடிகர் சஞ்சய் தத் புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் திரைத்துறையில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் சஞ்சய் தத்தும் ஒருவர். கடந்த ஆகஸ்ட் மாதம் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சஞ்சய் தத்துக்கு 4-வது கட்ட நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் மும்பையில் தன்னுடைய முதல் கட்ட சிகிச்சையை பெற்றார். அதையடுத்து அவர் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்றார்.
சமீபத்தில் சஞ்சய் தத் மிகவும் மெலிந்து ஒல்லியாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியது. தற்போது அமெரிக்காவில் இருந்து மும்பை திரும்பியிருக்கும் சஞ்சய் தத் ஒரு சலூனில் முடிவெட்டிக்கொள்ளும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகப் பரவி வருகிறது. அதில் “ஹாய், இது சஞ்சய் தத். மீண்டும் சலூனுக்கு வருவதை நன்றாக உணர்கிறேன். முடிவெட்டிக்கொண்டேன். இங்கே பாருங்கள் இது தான் என் சமீபத்திய தழும்பு. ஆனால் நான் அதை வெல்வேன். நான் விரைவில் இந்த புற்றுநோயிலிருந்து வெளியேறுவேன்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நவம்பர் மாதம் முதல் கேஜிஎப் 2 படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.