பிரபல முகப்பொலிவு க்ரீம் விளம்பர நடிகைக்கு குணப்படுத்த முடியாத தோல் வியாதி!
1633597001653

நடிகை யாமி கவுதம் தனக்கு நீண்ட நாட்களாக தோல் வியாதி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பிரபல முகப்பொலிவு க்ரீம் விளம்பரத்தில் நடித்து இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானார் யாமி கவுதம். தற்போது பாலிவுட் நடிகையாக மாறியுள்ளார். பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் யாமி கவிதம் தனக்கு பல வருடங்களாக Keratosis Floris என்ற தோல் வியாதி இருந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். தனது பதின் பருவத்தில் இருந்தே இந்தத் தோல் வியாதி இருந்து வருவதாகவும் அதை குணப்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இத்தனை நாட்களாக இதை மறைத்து வந்தேன். இன்று தைரியமாக தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.