இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை... தற்கொலைக்கான கடிதம் சிக்கியதால் பரபரப்பு !

akanksha

இளம் நடிகை ஒருவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாகவும், மாடல் அழகியாகவும் இருந்தவர் அகன்ஷா. விளம்பர படங்களில் நடித்து பிரபலமான அவர், அதன்பிறகு பாலிவுட் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். இந்தியில் சூப்பர் ஹிட் படமான 'சியா' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் நெஞ்சில் இடம்பிடித்துள்ளார். 

akanksha

தமிழில் '9 திருடர்கள்' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை அகன்ஷா, மும்பை வெர்சோவா பகுதியில் உள்ள தனியார் ஒட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தார். கடந்த புதன் கிழமை ரூமிற்கு சென்ற நிலையில் இரண்டு நாட்களாகியும் ரூம் கதவு திறக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

அதனால் அறையின் கதவை நீண்ட நேரம் ஓட்டல் ஊழியர்கள் தட்டியுள்ளனர். ஆனால் கதவு திறக்காத நிலையில் சந்தேகமடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது நடிகை அகன்ஷா, தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்று எழுதி வைத்துள்ள கடிததத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.  

 

Share this story