தங்கை திருமணத்தில் கலந்துக்கொண்டு உற்சாகமாக நடனமாடிய ஜஸ்வர்யா ராய்…

தங்கை திருமணத்தில் கலந்துக்கொண்டு உற்சாகமாக நடனமாடிய ஜஸ்வர்யா ராய்…

தங்கை திருமணத்தில் கணவர் அபிஷேக் பச்சனுடன் கலந்துகொண்டு நடிகை ஜஸ்வர்யா ராய் நடனமாடியுள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய். கர்நாடகவை சேர்ந்த இவர், 1994-ல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார். உலக அழகி பட்டத்தை வென்ற பிறகு தமிழில் மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் நடிகையாக திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு புகழ்பெற்று தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த ஜஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துக்கொண்டு பெரிய குடும்பத்தில் செட்டிலானார்.

தங்கை திருமணத்தில் கலந்துக்கொண்டு உற்சாகமாக நடனமாடிய ஜஸ்வர்யா ராய்…

இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து பிசியாக நடித்து வரும் இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

தங்கை திருமணத்தில் கலந்துக்கொண்டு உற்சாகமாக நடனமாடிய ஜஸ்வர்யா ராய்…

தனது ஊரான பெங்களூருவுக்கு எப்போதாவது வந்து செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் ஜஸ்வர்யா ராய், தற்போது சித்தி மகளின் திருமண நிகழ்வுக்காக நீண்ட நாட்கள் கழித்து தனது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆரத்யாவுடன் பெங்களூர் வந்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் மெகந்தி வைக்கும் வைபவம் ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றது.அப்போது மணமகள் ஸ்லோகாவுடன் இணைந்து நடனமும் ஆடியுள்ளார் ஜஸ்வர்யா.இதனால் நிகழ்ச்சிக்கு வந்திருந்த உறவினர்களும், விருந்தினர்களும் ஆச்சரியம் அடைந்தனர்.


Share this story