பிரபல பாப் சிங்கர் ஆல்பத்தில் ‘ஹன்சிகா’… வைரலாகும் வீடியோ…
பாப் பாடகர் ஆல்பத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி நடனமாடியுள்ள வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி என பலமொழிகளில் நடித்து வருபவர் ஹன்சிகா. இந்திய அளவில் புகழ்பெற்ற ஹன்சிகாவுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. தற்போது தமிழில் ஜமீல் இயக்கியுள்ள ”மஹா” படத்தில் நடித்துள்ளார். ஹன்சிகாவின் 50வது படமாக உருவாகியுள்ள இந்த படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.
இந்நிலையில் பிரபல பாலிவுட் இசைப்பாடகர் டோனி கக்கார் ஒரு ஆல்பம் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதில் நடிகை ஹன்சிகாவும் நடனமாடியுள்ளார். சட்டி தில்லான் இயக்கியுள்ள இந்த பாடலுக்கு கக்கார் இசையமைத்துள்ளார்.
இது குறித்து பேசியுள்ள நடிகை ஹன்சிகா, இசை துறையில் அனைவரும் கொண்டாடும் இசைப்பாடகர் டோனி கக்கார் உருவாக்கிய பாடலில் நானும் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. மிகப்பெரும் சாதனைகள் படைத்திருந்தாலும் மிக எளிமையாகவே பழகினார். அவருடன் இணைந்து பணியாற்றியது அற்புதமான அனுபவமாக இருந்தது. இந்த பாடலை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என ஹன்சிகா கூறியுள்ளார்.