விஜய் சேதுபதி நடித்து வரும் ‘லாபம்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
விஜய் சேதுபதி தற்போது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ‘லாபம்’ படத்தில் நடித்து வருகிறார். ஜனநாதன் ஈ, பேராண்மை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்து வந்தார். படப்பிடிப்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை என்று படப்பிடிப்பில் இருந்து ஸ்ருதி ஹாசன் விலகியதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தில் ஜெகபதி பாபுவும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். விவசாயிகள் பிரச்சனை குறித்து படம் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

தற்போது லாபம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி வித்தியாசமான கெட்டப்பில் மிரட்டலாக இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
