முதன்முறையாக வில்லியாக நடிக்கும் சமந்தா… வெளியான வைரல் புகைப்படம்!
சமந்தா நடித்து வரும் தி பேமிலி மேன் வெப் சீரிஸின் படபடபிடிப்பில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட்டில் ராஜ் மற்றும் டிகே ஆகியோரது இயக்கத்தில் மனோஜ் பாஜபாயி, ப்ரியாமணி நடிப்பில் வெளியான தி பேமிலி மேன் சீரிஸ் அமோக வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து, தற்போது இந்த வெப் சீரிஸின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
இந்த இரண்டாம் பாகத்தின் மூலம் முதன்முறையாக ஓடிடி-யில் என்ட்ரி கொடுக்கிறார் சமந்தா. முதல் பாகத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பால் இரண்டாம் பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சமந்தா இந்த சீரிஸில் வில்லனாக நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சமந்தா இதுவரை கியூட்டான கதாநாயகியாக மட்டுமே நடித்துள்ளார். முதன்முறையாக வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால் வெப் சீரிஸுக்கு மேலும் அதிக எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
தற்போது பேமிலி மேன் சீரிஸ் படப்பிடிப்பு தளத்தில் சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.