ஜகமே தந்திரம் படத்தின் ‘புஜ்ஜி’ பாடல் வெளியானது!

‘ஜகமே தந்திரம்’ படத்தின் புஜ்ஜி பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். முற்றிலும் வேறுவிதமான கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ளதாகப் படக்குழு தெரிவித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
ஜகமே தந்திரம் படத்திற்கு கோலிவுட் வட்டாரத்தில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தின் மோஷன் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தின் ‘ரகிட ரகிட’ பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது இந்தப் படத்தின் புஜ்ஜி பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. பாடலில் தனுஷ் கோர்ட் சூட்டுடன் மிகவும் ஸ்டைலிஷ் ஆக இருக்கிறார். இந்தப் பாடலை சந்தோஷ் நாராயணன், அனிருத் இருவரும் பாடியுள்ளனர். விவேக் பாடல் வரிகள் எழுதியுள்ளார்.
இப்படத்தின் டீசர், ட்ரைலர், ரிலீஸ் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

