சிவகார்த்திகேயனை அடுத்து, உதயநிதி படத்தில் இணைந்த சிவாங்கி!

சிவகார்த்திகேயனை அடுத்து, உதயநிதி படத்தில் இணைந்த சிவாங்கி!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாக இருக்கும் ஆர்ட்டிகிள் 15படத்தின் தமிழ் ரீமேக்கில் குக் வித் கோமாளி சிவாங்கி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

பாலிவுட்டில் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான ஆர்டிகிள் 15 திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

சிவகார்த்திகேயனை அடுத்து, உதயநிதி படத்தில் இணைந்த சிவாங்கி!

அதையடுத்து இந்தப் படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமைகளை போனி கபூர் கைப்பற்றியுள்ளார்.

ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி கதாநாயகனாக நடிக்கிறார். கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சிவகார்த்திகேயனை அடுத்து, உதயநிதி படத்தில் இணைந்த சிவாங்கி!

தற்போது அப்டேட் என்னவென்றால், இந்தப் படத்தில் சிவாங்கி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. பாடகியாக வேண்டுமென்ற கனவில் விஜய் டிவியில் நுழைந்த சிவாங்கிக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரும் வரப்பிரசாதமாக மாறியுள்ளது. குழந்தை போன்ற குரலுக்காக விமர்சிக்கப்பட்ட சிவாங்கிக்கு அதுவே மிகப்பெரிய பக்க பலமாக மாறியது. அந்த நிகழ்ச்சி மூலம் பெரும் புகழைப் பெற்றுள்ள சிவாங்கிக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ படத்தில் சிவாங்கி நடிக்கிறார். தற்போது உதயநிதி படத்திலும் நடிக்க உள்ளார். மேல ஏறி வாரேன் ஒதுங்கி நில்லு என்ற பாணியில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார் சிவாங்கி!

Share this story