சூரரைப் போற்று படத்தைப் பிடிக்காதவர்களுக்கு கேப்டன் கோபிநாத்தின் பதில்!

சூரரைப் போற்று படத்தைப் பிடிக்காதவர்களுக்கு கேப்டன் கோபிநாத்தின் பதில்!

சூரரைப் போற்று படத்தைப் பிடிக்காதவர்களுக்கு கேப்டன் கோபிநாத் பதிலளித்துள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படம் 11-ம் தேதி இரவு அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. ஏர் டெக்கான் விமான நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.

சூரரைப் போற்று படத்தைப் பிடிக்காதவர்களுக்கு கேப்டன் கோபிநாத்தின் பதில்!

இப்படத்தைப் பார்த்த கேப்டன் கோபிநாத் படத்தைப் பாராட்டிப் பதிவிட்டிருந்தார்.

சூரரைப் போற்று… எனது புத்தகத்தின் கதையின் உண்மையான சாரத்தை சிறப்பாக பேசியுள்ளது. கிராமப்புற பின்னணியைக் கொண்ட ஒரு தொழில்முனைவோரின் போராட்டங்கள் மற்றும் இன்னல்களுக்கு எதிரான நம்பிக்கை, அதன் வெற்றியின் ஆன்மா ஆகியவை உண்மையாக காண்பிக்கப்பட்டுள்ளது. என் மனைவி கதாபத்திரத்தில் நடித்திருந்த அபர்ணா நடிப்பு நன்றாக இருந்தது” என்று பாராட்டினார்.

சூரரைப் போற்று படத்தைப் பிடிக்காதவர்களுக்கு கேப்டன் கோபிநாத்தின் பதில்!

தற்போது சூரரைப் போற்று படத்தைப் பிடிக்கவில்லை என்று கூறுபவர்களுக்கு கேப்டன் கோபிநாத் பதிலளித்துள்ளார்.

“சூரரைப் போற்று படத்தைப் பார்த்த எனது பள்ளி நண்பர்கள், ராணுவ நண்பர்கள், மற்றும் சகாக்கள் எனது சிம்பிள் ஃப்ளை புத்தகத்தின்/ வாழ்க்கையின் சம்பவங்கள் உண்மையாக காண்பிக்கப்படவில்லை என்று ஏமாற்றம் தெரிவித்திருந்தனர்.

சினிமாவிற்காக அதில் கற்பனை சேர்க்கப்பட்டுள்ளது என்று நான் அவர்களுக்குச் சொல்கிறேன். பொழுதுபோக்குகிற்காக பார்த்தால் இப்படம் அருமையாக இருக்கும்.

முற்றிலும் உண்மையாக எடுத்தால் அது ஆவணப்படமாக இருந்திருக்கும். இதற்கு மதிப்பு இருக்கிறது. ஆனால் அது வேறு ஜேர்னரில் உள்ளது. ஹீரோ ஆண்மை நிறைந்தவராக காண்பிக்கப்பட்டாலும் அது பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் ‘ஹீரோக்களும் வெற்றி பெற மனைவி மற்றும் குடும்பத்தினரிடமிருந்து உணர்ச்சிபூர்வமான ஆதரவு தேவை என்பதைக் காட்டுகிறது. மேலும் குழு உறுப்பினர்கள் பெரும்பாலும் ஹீரோவை விட தியாகம் செய்கிறார்கள் என்றும் காண்பித்துள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

Share this story