விக்ரம், துருவ் விக்ரம், கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியின் ‘சியான் 60’… மார்ச் மாதம் துவக்கம்!

விக்ரம், துருவ் விக்ரம், கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியின் ‘சியான் 60’… மார்ச் மாதம் துவக்கம்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் ‘சீயான் 60’ படம் மார்ச் மாதம் முதல் துவங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அப்படத்தை அடுத்து விக்ரமின் 60-வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

விக்ரம், துருவ் விக்ரம், கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியின் ‘சியான் 60’… மார்ச் மாதம் துவக்கம்!

இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். 

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் துவங்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டே படம் ரிலீஸ் ஆகவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

விக்ரம், துருவ் விக்ரம், கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியின் ‘சியான் 60’… மார்ச் மாதம் துவக்கம்!

தற்போது விக்ரம் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’ படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய இருக்கிறது. அதன் பின்னர் மார்ச் மாதம் முதல் இந்தப் படத்தின் இணைவார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில் துருவ் விக்ரம் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

Share this story