டான் நடிகரை மிரட்டிய பிரபல பைனான்சியர்... அதிர்ச்சியில் திரையுலகம் !

actor

பிரபல நடிகரை சினிமா பைனான்சியர் ஒருவர் மிரட்டியது திரையுலகில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளை கவர்ந்தவர் பிரபல நடிகர். இவரது திரைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியானது. முழுக்க முழுக்க காமெடியில் உருவான அந்த படத்தை அக்கட தேசத்து இயக்குனர் இயக்கியிருந்தார். கடந்த ஆண்டு பண்டிகை தினத்தில் வெளியான இந்த படம் படுதோல்வியை சந்தித்தது. 

இதனால் படத்தை விநியோகம் செய்த பிரபல பைனான்சியருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நஷ்டத்தை சரி செய்ய பணத்தை திரும்பி கொடுக்கும்படி டான் நடிகரை தொடர்ந்து பைனான்சியர் கேட்டுள்ளார். ஏற்கனவே நடிகர் அதிக கடனில் இருப்பதால் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறார். 

இந்நிலையில் நடிகரை சமீபத்தில் தொடர்பு கொண்ட பைனான்சியர் தொடர்ந்து டார்ச்சர் செய்து வருவதோடு மிரட்டியும் உள்ளாராம். இதனால் வேறு வழியில்லாமல் பணத்தை திருப்பி கொடுத்திருக்கிறார். நடிகரை மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story