தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக்கு நயன்தாரா காரணமா?

s

பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குனர் கஸ்தூரிராஜா இளைய மகன் நடிகர் தனுஷ்க்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சுமார் 18 ஆண்டுகள் திருமண வாழ்வுக்குப் பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு இருவரும் ட்விட்டரில் தாங்கள் திருமண வாழ்வில் இருந்து பிரிந்து விட்டதாக பதிவிட்டனர். தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா இடையே உள்ள பிரச்சினையை தீர்க்க இரு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர். 

dhanush aishwarya nayanthara

இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமண பதிவை ரத்து வேண்டும் எனக் கோரியுள்ளனர். இந்த மனு மீதான  விசாரணை குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இருவருக்கும் விவாகரத்து வழங்கும் வழக்கின் தீர்ப்பை வரும் 27 தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Dhanush, Nayanthara's awkward encounter at a wedding goes viral


இந்நிலையில் இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பிரபல பத்திரிகையாளர் அந்தணன் அளித்த பேட்டியில், “ஏற்கனவே நயன்தாரா மீது தனுஷ்க்கு கோபம். நானும் ரௌடிதான் படத்தில் நயனும், விக்னேஷ் சிவனும் நடந்துகொண்டதே அதற்கு காரணம். அதற்கு பிறகு ஆவணப் படத்துக்காக வீடியோக்களையும் தனுஷிடம் அவர்கள் நேரடியாக கேட்காமல் தனுஷின் மேனேஜரை வைத்து குறுக்கு வழியில் சென்றார்கள். தனுஷும், ஐஸ்வர்யாவும் விவாகரத்து வரை சென்றதற்கு காரணமும் நயன்தாரா தான். நயன்தாராவை தனுஷ் காதலித்தார். நயனும் தனுஷை காதலித்ததாக சொல்லப்பட்டது. இதுதான் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக்கு முதல் காரணம்” எனக் கூறியுள்ளார்.

Share this story