ஜூலியெட்டாக வலம் வந்த கொழுக் மொழுக் நடிகையின் ராஜ தந்திரம்…….இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே….

photo

சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட கொழுக் மொழுக் நடிகை தனது தோழிக்கே டேக்கா கொடுத்துதான் அந்த ஈஃபிள் ஓரம் மேரி மீ சொன்ன நபரை திருமணம்  செய்ய உள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. 

photo

விரலை வைத்து வித்தை காட்டிய நடிகரை காதலித்து கலட்டிவிட்ட கொழுக் மொழுக் நடிகைக்கு, தற்பொழுது அரண்மனையில் பிரம்மாண்ட திருமண ஏற்பாடு தயராகி வருகிறது. அது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் அந்த கொழுக் மொழுக் நடிகை பற்றிய கிசு கிசு தீயாக பரவி வருகிறது.

photos

அதாவது  இந்த நடிகை திருமணம் செய்ய இருக்கும் நபர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவராம்!...இதில் கூடுதல் ஷாக் என்னவென்றால்  அந்த விவாகரத்து செய்யப்பட்ட பெண் கொழுக் மொழுக் நடிகையின் நெருங்கிய நண்பராம்!.. பின்குறிப்பு: 6 வருடத்திற்கு முன் இவர்களின் திருமணத்திற்கு  சென்று அந்த லோலிட்டா நடிகை குத்தாட்டம் வேறு போட்டுள்ளார்.

photos

அவர்களுக்கு விவாகரத்து ஆன நிலையில் தற்பொழுது மேரி மீ என ஈஃபிள் ஓரமாக ரோமியோ போல இந்த கொழுக் மொழுக் ஜூலியெட்டிற்கு ஹார்ட்டினை பறக்க விட்டுள்ளார். அந்த நடிகையும் ‘ஓ மை காட், வாட்ட சர்ப்ரைஸ்’ என்பது போல திரையில் காட்டிய எக்ஸ்பிரஷனை அங்கும் கொடுத்து, போட்டோவை வேறு சமூகவலைதளத்தில் வெளியிட்டனர். இந்நிலையில்  ‘என்னங்க சொல்றீங்க இந்த நடிகை இப்படிபட்டவரா, இந்த ஜூலியெட் கல்யாணத்திற்கு போகனுமா என்ன?’ எம்பது மாதிரியாக சக நடிகர், நடிகைகள் கூறிவருவதாக கோலிவுட் வட்டாரம் கிசுகிசுக்கிறது.  

​​​​​​photos

Share this story