பிரபல இயக்குனரால் சிக்கலில் மாட்டிக்கொண்ட வாரிசு நடிகர்

gossips

தமிழ் இயக்குனரால் தனக்கு ஒப்பந்தமான திரைப்படம் கைவிட்டு நழுவியதால் வாரிசு நடிகர் வருத்தத்தில் உள்ளாராம். 


தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக இருக்கும் ஒருவர் புதிய படம் ஒன்றை டோலிவுட்டில் இயக்கவுள்ளார். இதற்காக நீண்ட நாட்களாக முதற்கட்ட பணிகளை செய்து வருகிறார். தற்போது இந்த படத்தின் பணிகள் முடிந்து ‌‌‌படப்பிடிப்புக்கு தயாராகிவிட்டார். அந்த படத்தில் வாரிசு நடிகர் ஒருவர் ஹீரோவாக நடிக்க உள்ளார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ள நிலையில் இயக்குனர், வாரிசு நடிகருக்கு புதிய உத்தரவு  ஒன்றை போட்டுள்ளாராம்‌. அது என்னவென்றால் தன்னுடைய படம் முடியும் வரை வேறு எந்தப் படத்திலும் நடிக்கக்கூடாது என்பதுதான் அந்த உத்தரவாம். 

இதனால் புதியதாக நடிப்பதாக இருந்த படத்தை தள்ளி வைப்பதாக அறிவித்தாராம். அதோடு தமிழ் இயக்குனரின் படத்தில் முழு கவனத்தில் செலுத்த உள்ளதாக கூறியிருக்கிறார். இதனால் கோபமடைந்த அந்த படத்தின் தயாரிப்பாளர் தன்னுடைய படத்திற்கு வேறு ஒரு ஹீரோவை தேடி வருவதாக நடிகருக்கு தகவல் சொல்லப்பட்டது. தமிழ் இயக்குனரால் இப்படியொரு சிக்கலில் மாட்டிக்கொண்ட நடிகர்,படம் கைவிட்டு தழுவியதை எண்ணி வருத்தத்தில் உள்ளாராம். 

Share this story

News Hub