ரெண்டகம் - விமர்சனம்

'உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்றவன் ஒரு நாளும் உருப்படமாட்டான்'ன்னு ஊர் பக்கம் ஒரு சொலவடை உண்டு. அரவிந்த் சாமி,குஞ்சாக்கோ போபன் நடிப்பில் வெளிவந்திருக்கும் இந்தப் படத்தின் ஒன்லைனும் அதுதான்.
மும்பை தியேட்டர் ஒண்ணுல பாப்கான் வித்துக்கிட்ருக்க வெள்ளந்தியான ஆள் அரவிந்த் சாமி.அவரோட பழகி,பழைய ஞாபகங்களை மீட்டெடுத்தா… மிஸ்ஸான முன்னூறு கோடி ரூபாய் தங்கம் எங்களுக்கு கிடைக்கும்.இந்த வேலைய முடிச்சுக் கொடுத்தால் உனக்கு இருபத்தஞ்சு லட்சம்னு டீல் போட்டு குஞ்சாக்கோ போபனை அனுப்புது ஒரு டான் குருப்.லவ்வரோட ஆஸ்திரேலியா கனவு நிறைவேறணும்… அதுக்காக ரிஸ்க் எடுத்துப் பார்த்திரலாம்னு குஞ்சாக்கோவும் களத்தில் இறங்குகிறார்.
தியேட்டரில் இருவருக்குமான சந்திப்பு… அதன் பின்னான காட்சிகள் எல்லாம், ஸ்டேசனைவிட்டு மெல்ல ஊர்ந்து நகர்ற ட்ரெயின் மாதிரி மெதுவா போற மாதிரிதான் இருக்கு.வாங்கண்ணே ஒரு கார் டெலிவரி குடுக்கிறதுக்காக கோயம்பத்தூர்வரை போயிட்டு வரலாம்ன்னு கொஞ்சாக்கோ கூப்பிட்றார்.அரவிந்த் சாமியும் வேண்டா வெறுப்பா ஓக்கே சொல்றார்.மும்பை வயா கோவான்னு ஆரம்பிக்கிற கார் ட்ரிப் எடுக்கிற வேகம் இருக்கே… அட்டகாசம்! என்ன நடக்குதுன்னு டீட்டெயிலா சொன்னால் படம் பார்க்கும் போது சுவாரசியம் இல்லாமல் போகிற வாய்ப்பு இருக்கு.
இண்டெர்வெல் பிளாக்கில் கொடுக்கிற ட்விஸ்ட்ல ஆரம்பிச்சு, எண்டு கார்டு போடுற வரைக்கும் ஏகப்பட்ட ட்விஸிட்தான்.யாரும் யூகிக்க முடியாத அளவுக்கு அட்டகாசமான ஸ்க்ரீன் பிளே.கதை,திரைக்கதை எழுதியிருப்பவர் எஸ்.சஞ்சீவ். டைரக்சன்-டி.பி.பெளிணி.ஒரு கேங்ஸ்டர் மூவி எப்படி எடுக்கணும்ங்கிறதுக்கு இந்தப் படம் சரியான உதாரணம். லொகேஷன்,ஆக்சன்ன்னு அரவிந்த்சாமி,குஞ்சாக்கோ போபன் சேஞ்ஓவர்ன்னு அதகளப்படுத்தியிருக்கிறது மொத்த டீமும்.மஸ்ட் வாட்ச்.
- V.K.சுந்தர்