நித்யா மேனன் தான் படத்தோட ஹீரோ... 'திருச்சிற்றம்பலம்' திரை விமர்சனம்!

படத்தின் டைட்டிலைப் பார்த்து தனுஷ் ரசிகர்கள் கொஞ்சம் ஜெர்க் ஆகியிருப்பது என்னவோ உண்மைதான். அப்படியெல்லாம் பயப்படுற அளவுக்கெல்லாம் கிடையாது என்பதே நிஜம். புதுப்பேட்டை மாதிரி எகிறி அடிக்கிற கேரக்டர்லாம் பண்ணின தனுஷ், இறங்கி வந்து முழு காதல் கதையில் நடித்திருக்கிறார்.
நமக்குப் பக்கத்திலேயே பேரண்பு காட்ற ஆள் இருந்தாலும், வெளியில அன்பைத்தேடி மனசு அலை பாயுமில்லையா.! அப்படிதான் அலைகிறார் தனுஷ். அந்த ரெண்டு காதலுக்கும் நித்யா மேனன்தான் மாஸ்டர் பிளான் போட்டுக்கொடுக்கிறார். ரெண்டும் ஃபிளாப்.தான் தேடிக்கிட்டிருக்கிற பேரன்புக்காரி, கூடவே இருக்கிற நித்யா மேனன்தான் என்று தெரிந்த பிறகு நடக்கிற ட்விஸ்ட்டும்; மிச்சமும் க்ளைமாக்ஸ்.
லவ் ஃபெயிலியர் ஆகும் போதெல்லாம்.. இளையராஜாவின் காதல் சோகப் பாட்டைப் போட்டுக் கேட்கிற சாதாரண மிடில் கிளாஸ் பையன் கேரக்டரில் அப்படிப் பொருந்திப் போகிறார் தனுஷ். பாசமுள்ள அப்பாவாக பிரகாஷ்ராஜ் நெகிழவைத்திருக்கிறார்.
இவர்களையெல்லாம் விட இந்தப் படத்தை தூக்கி நிறுத்தியிருப்பது பாரதிராஜாவும், நித்யா மேனன் ரெண்டு பேரும்தான். பேரன் தனுஷோடு பீர் அடிச்சுகிட்டு தன்னோட கடந்த கால காதலைச் சொல்றப்போல்லாம் தியேட்டரே அதிருது. நித்யா மேனன் ஓவர் வெயிட்டாக இருந்தாலும்… நடிப்பில் மொத்த வெயிட்டையும் இறக்கி வைக்கிறார். நித்யா தவிர்த்து இந்தக் கேரக்டரை யார் பண்ணியிருந்தாலும் சொதப்பலா முடிஞ்சிருக்கும்.
அடிதடி, வெட்டுக்குத்து, ரத்தம் தெறிக்காம ஒரு ஃபீல் குட் மூவி பார்க்கணும்னு நினைக்கிறவங்க ஒரு தடவை பார்க்கலாம்.
-VK சுந்தர்.