ஆதார் - விமர்சனம்

கார்ப்பரேட் ஆட்கள் தங்களோட இமேஜைக் காப்பாத்திக்க எந்த லெவலுக்கு இறங்கி அடிப்பாங்கன்னு அப்பட்டமா சொல்ல முயற்சித்திருக்கிற படம்தான் ஆதார்.
ஊர்ல பொழப்புக்கு வழியில்லாம, மனைவியோடு சென்னைக்கு வந்து கட்டட வேலை செஞ்சுக்கிட்டு இருக்கார் கருணாஸ்.ஒரு நாள் ராத்திரி கர்ப்பமான தன்னோட மனைவியை டெலிவரிக்காக ஹாஸ்பிடல்ல சேர்கிறார்.குழந்தையும் பொறக்குது.அடுத்த நாள்,அட்டண்டராக இருந்த இனியா சாக்கடைக்குள் மர்மமாக செத்துக்கிடக்கிறார். மனைவியை காணோம்.எங்க தேடியும் கிடைக்கல.கடைசி நம்பிக்கையோட போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து புகார் கொடுக்கிறார்.போலீஸ் கண்டு பிடிச்சுக் கொடுக்குதா இல்லையாங்கிறது 'பொளேர்' க்ளைமாக்ஸ்.
காமெடி நடிகராக அடையாளம் காணப்பட்ட கருணாஸ், கதறியழும் கைக்குழந்தையை கையில் ஏந்தியபடி தளர்ந்த நடையோடு படம் முழுக்க வரும் காட்சிகள்… கேரக்டர் ஆர்டிஸ்ட்டா நெகிழ வச்சிருக்கார்.
அதிகார வர்க்கம்,எப்பவும் ஏழைக்கானது இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்ல நினைத்திருக்கும் இயக்குனர் ராம்நாத் பழனிக்குமாரைப் பாராட்டலாம். பெரும்பாலான காட்சிகள் போலீஸ் ஸ்டேசன்லயே நடக்குது.தவிர மொத்தப் படமும் நைட் எஃபெக்ட்லயே போவதால்… ஸ்லோவா நகர்ற மாதிரி ஒரு ஃபீலிங்… கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.அருண் பாண்டியன், படம் ஆரம்பிச்சு முடியுற வரை எதையோ பறிகொடுத்த மாதிரியே இருக்கிறார். ஏன் அப்படி இருந்தார்ங்கிறது க்ளைமாக்ஸ் டைம்லதான் தெரியுது.
அந்தக் கேரக்டர் ஏன் அப்படி இருக்கார்னு படம் ஆரம்பிக்கும் போதே ஒரு லீட் கொடுத்திருந்தால்… சுவாரசியம் கூடியிருக்கும். ஸ்கிரீன் ப்ளேல கொஞ்சம் மெனக்கிட்டிருந்தால் அட்டகாசமான க்ரைம் த்ரில்லராக மாறியிருக்கும்.ரெண்டு மணி நேரப் படம்தான்… ஆனால் ரொம்ப நேரமா பார்த்துகிட்டு இருந்த மாதிரி தோணுவது எனக்கு மட்டும்தானா! சின்னச் சின்ன குறைகள் இருந்தாலும்,தவிர்க்க முடியாத படம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
- V.K.சுந்தர்