நடிகர் விமலின் வலிமையான கம்பேக்... சீட் நுனியில் உட்கார வைக்கும் த்ரில்லர்... 'விலங்கு' வெப் சீரிஸின் ட்விட்டர் விமர்சனம்!

vilangu-web

சமீபகாலமாக விமல் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் தோல்வியைத் தழுவி வருகின்றன. இந்நிலையில் விமல் தற்போது வெப் சீரிஸில் களமிறங்கியுள்ளார். விலங்கு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய சீரிஸில் விமல் போலீசாக நடித்துள்ளார். புரூஸ் லீ' படத்தை இயக்கிய பிரசாத் பாண்டிராஜ் இந்த சீரிஸை இயக்கியுள்ளார். மேலும் முனிஸ்காந்த், பால சரவணன் ஆகியோரும் இந்த சீரிஸில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள விலங்கு சீரிஸ் ரசிகர்களைக் கவர்ந்ததா என்று அவர்களின் விமர்சனங்களை வைத்தே தெரிந்துகொள்ளலாம். 


இது தமிழில் இதுவரை உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த வெப்சீரிஸ்களுள், (இல்லை) தமிழில்  உருவான மிகச்சிறந்த வெப் சீரிஸ் விலங்கு தான். விமல், இயக்குனர் பிரசாந்த், தயாரிப்பாளர் மதன் மூவரும் பெரிய வெற்றி அடைந்ததை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. நடிகர் பாலசரவணன் கதாபாத்திரம் வெறித்தனமாக இருந்தது. அனைவரும் சிறப்பாக நடித்திருந்தனர். குறிப்பாக அஜேஷின் இசை மற்றும் துரைராஜின் ஒளிப்பதிவு. 


தமிழ் உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த வெப்சீரிஸ் விலங்கு. நடிகர் விமலுக்கு சிறந்த கம்பேக்.விறுவிறுப்பான வெப்சீரிஸ். குறிப்பாக நான்கு மற்றும் ஐந்தாவது எபிசோடுகள் வெறித்தனமாக உள்ளது. நடிகர் பாலசரவணன் நடிப்பு பிரமாத. ஆச்சர்யப்படும் வகையில் புதுமுக நடிகரின் வில்லன் கதாபாத்திரம். இயக்குனர் பிரசாந்த் இடம் இருந்து எதிர்பார்க்காத ஒரு சிறந்த படைப்பு. தயாரிப்பாளர் மதனுக்கு வலிமையான கம்பேக்.


சிறப்பாக உருவாக்கப்பட்ட விருவிருப்பான இன்வெஸ்டிகேஷன் திரில்லர் சீரிஸ் விலங்கு. விமல் மற்றும் பாலசரவணன் நடிப்பு செம. வேற லெவல் இசை மற்றும் ஒளிப்பதிவு சூப்பர். 5 வது எபிசோடு தாறுமாறு. கண்டிப்பாக பார்க்கவும்.


வாவ்.... கச்சிதமாக உருவாக்கப்பட்ட ஒரு திரில்லர் வெப்சீரிஸ். விமல் மற்றும் பாலசரவணன் இருவரும் மிகவும் அருமையான கம்பேக் கொடுத்துள்ளனர். இருவருக்கும் நன்றாக பொருத்தமாக உள்ளது. இது ஒரு திரைப்படமாக வந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். கண்டிப்பாக பார்க்கவும்.


விருவிருப்பான க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர். ரசிகர்களை கடைசி வரை கட்டிப்போட வைக்கும் வலிமையான கதைக்களம் மற்றும் சிறப்பான கதையமைப்பு கொண்டுள்ளது. ஒவ்வொரு எபிசோடும் முடிவில் நம்மை ச சுவாரசியத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது. பெரும்பாலும் நம்மை விறுவிறுப்பாக உணர வைக்கிறது. விமல் நன்றாக நடித்துள்ளார். பாலசரவணன் அற்புதம். திரைக்கதை வலிமையாக உள்ளது. ஏற்ற பின்னணி இசை கண்டிப்பாக பார்க்கவும்.



ரசிகர்களின் விமர்சனங்களை பார்க்கும்போது நடிகர் விமல் சரியான ஒரு கதைகளை தேர்ந்தெடுத்து வலிமையான ஒரு கம்பத்தை கொடுத்துள்ளார் என்று தோன்றுகிறது. இனி வரும் காலங்களில் இது போன்ற கதைகளை தேர்ந்தெடுத்து மீண்டும் விட்ட இடத்தை பிடிப்பார் என்று நம்பிக்கை உருவாகியுள்ளது.

Share this story