ஐஸ்வர்யா ராஜேஷின் 'பூமிகா' திரைப்பட ட்விட்டர் விமர்சனம்!
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள பூமிகா படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பூமிகா’. ராபர்ட் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இந்த படம் நேரடியாக விஜய் டிவியில் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி வெளியானது. அதையடுத்து தற்போது நெட்பிளிக்ஸ்சிலும் ஒளிபரப்பாகி வருகிறது.
தற்போது படம் ரசிகர்கள் மத்தியில் எந்தளவிற்கு வரவேற்பு பெற்றுள்ளது என்பதை அவர்களின் விமர்சனங்களை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.
தாய்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புடன் வாழ்வது பற்றிய வலுவான செய்தியுடன் பார்க்கக்கூடிய திகில் த்ரில்லர் திரைப்படம். ஆனால் திகில் அல்லது பொழுதுபோக்கு பிரிவிற்குள் வராமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஒளிப்பதிவு, இடம் மற்றும் பின்னணி இசை ஆகியவை சிறப்பாக இருந்தது. ஒரு முறை பார்க்கலாம்.
#Bhoomika - Watchable horror thriller movie with strong message about mother nature and living with eco system but could be better since doesn’t fall in horror or entertainment category.
— Naran (@Naran_YNWA) August 29, 2021
Special mention to cinematographer, location and background score.
Watchable once. pic.twitter.com/4B8LqoVvbf
மிகவும் சுமாரான ஓடிடி தயாரிப்பு. படத்தில் எந்த சுவாரசியமும் இல்லை. ஐஸ்வர்யா ராஜேஷுக்கு குறைந்த முக்கியத்துவமே கொடுக்கப்பட்டுள்ளது.
திரைக்கதை மற்றும் இயக்கத்தை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். படத்தில் த்ரில்லர் எதுவுமில்லை. ஒரு முறை பாருங்கள்.
#Bhoomika : A strictly average OTT product.
— Moviemaniac (@Moviemaniac555) August 22, 2021
Nothing more interesting in this horror thrilling with a message plot. Less screen space for Aishwarya Rajesh .
Screenplay and direction could have been done more better .Lacks thrilling element.
Watch it for once
Rating : 2.5/5 pic.twitter.com/2AGLhwlwqY
நேத்து கிட்டத்தட்ட எல்லாரும் பாத்துருப்பீங்க விஜய் டீவில நேரிடையான வெளியான படம். பேய் படம்னு நெனச்சு பார்த்துக்கிட்டு இருந்தப்போ திடீர்னு இது ஒரு சைக்கலாஜிக்கல் ஹாரர் படமானு தோணுச்சு. தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தவும்.
#பூமிகா #Boomika #Bhoomika
— ஜாலியோ ஜிம்கானா (@Jolly_Payyan) August 23, 2021
நேத்து கிட்டத்தட்ட எல்லாரும் பாத்துருப்பீங்க விஜய் டீவில நேரிடையான வெளியான படம். பேய் படம்னு நெனச்சு பார்த்துக்கிட்டு இருந்தப்போ திடீர்னு இது ஒரு சைக்கலாஜிக்கல் ஹாரர் படமானு தோணுச்சு. தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தவும். pic.twitter.com/L5JyEesqfS
simple ah மரம் வளர்ப்போம், காடுகள் காப்போம்னு 10 minutes short film ah edukka vendiya padatha 2hours ah iluthu athuku 30 minutes ads vera potu, ithula pei indra perla mokka vera potu, சோதிக்காதிங்கடா
#BhoomiKa simple ah மரம் வளர்ப்போம், காடுகள் காப்போம்னு 10 minutes short film ah edukka vendiya padatha 2hours ah iluthu athuku 30 minutes ads vera potu, ithula pei indra perla mokka vera potu, சோதிக்காதிங்கடா...... 🤦♂️🤦♂️👎👎 #BhoomiKaReview
— f meeran (@Fmeeran15) August 22, 2021
நடிப்பு நன்றாக இருக்கிறது. படம் இன்னும் கொஞ்சம் த்ரில்லராகவும் விறுவிறுப்பாகவும் இருந்திருக்கலாம். இந்தப் படத்தில் இருக்கும் த்ரில்லர் விஷயங்களைப் பார்க்கும் போது படத்தை இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. படத்திற்கு நான் 2.8/5 தருகிறேன்.
Performance is gd all cast.but I thought the story could have been taken a little deeper Add more things creatively. I wondered if it could have been made better because of the horror element thriller movie.I give 2.8/5 #Bhoomika @aishu_dil @thisisavantika pic.twitter.com/6MxHzjFbQX
— mohamed inzam (@Inzam22Inzam) August 21, 2021
மிகவும் அர்த்தமுள்ள பேய் கதை .. திரைக்கதை மற்றும் பின்னணி இசை மிக நன்றாக இருந்தது .. முதல் பாதியில் நல்ல அளவு த்ரில் கொடுத்தது. இயற்கைத் தாயை அழிக்க முயற்சிப்பவர்களுக்கு ஒரு நல்ல விழிப்புணர்வு படம். ரதீந்திரன் ஒரு இயக்குனராக சிறந்து விளங்கினார்.
#Bhoomika - A very meaningful ghost story.. Screenplay and BGM was too good.. Gave good amount of thrill in the first half.. A very good awareness movie to those trying to destroy mother nature.. @RathindranR excelled as a director..
— BlastingTamilCinema (@BLSTG) August 23, 2021
3.75 / 5 - FANTASTIC 🙏🙏
ரசிகர்களின் விமர்சனங்களைப் பார்க்கும் போது படம் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக இருந்திருக்கலாம் என்று தெரிய வருகிறது.