'ஆடை' யைக் கிழித்து அதகளம் பண்ணலாம்னு ஆசைப்பட்ட அமலா பால்... ஒர்கவுட் ஆனதா... 'கடாவர்' திரை விமர்சனம்!

cadaver-33

'ஆடை' யைக் கிழித்து அதகளம் பண்ணலாம்னு ஆசைப்பட்ட அமலா பால் தனக்கான ரூட்டைப் பிடிக்கிறதுக்காகவே சொந்தமாக தயாரித்து நடித்திருக்கும் படந்தான் இது.

எப்போதும் சேஃபெர் ஜோனான 'க்ரைம் திரில்லர்' வகையறாவை முதல் படமாக எடுக்க வந்ததுக்கே அமலாவைப் பாராட்டலாம். போஸ்ட்மாடம் பண்ற போலீஸ் டாக்டர் கேரக்டர் அமலாவுக்கு. ஒரு கொலைக் கேஸுக்காக ஸ்பாட் விஸிட் அடிக்கிறார்.அப்பறம்தான் தெரியுது… அநியாயமாக செத்துப் போனவர்- சிட்டில டாப் டென் லிஸ்ட்ல இருக்கிற ஹார்ட் சர்ஜன்.யார் பண்ணினதுன்னு விசாரிக்க ஆரம்பித்தால் ஜெயில்ல இருக்கிற ஒரு கொலைக் குற்றவாளின்னு தெரியுது. ஜெயில்ல இருக்கிறவன் எப்படிக் கொலை பண்ண முடியும்னு போலீஸ் மண்டை காய்ந்து நிற்கிறப்பவே அடுத்தடுத்து கொலை விழுகிறது. அதுக்கும் அவன்தான் காரணம்! 

அவனுக்கு வெளியில இருந்து யார் ஹெல்ப் பண்றா…எதுக்காக இந்தக் கொலைகள் என்கிற சுவாரஸ்ய கிரைம் திரில்லர்தான் மீதிப் படம்.இந்தப் படத்தை மலையாள இயக்குனர் அனுப் எஸ் பணிக்கர் டைரெக்ட் பண்ணியிருக்கார்.ஒர்க் பண்ணின மொத்த டீமும் கேரளா ஆட்கள்.அதனால் மலையாளப் படம் பார்க்கிற ஃபீலிங் வருவதைத் தவிர்க்க முடியல.

cadaver

மார்ச்சுவரிக்குள் மூக்கைப் பிடித்துக் கொண்டு வரும் முனிஷ்காந்த், சுத்தி டெட்பாடி கிடக்க… வசந்த பவன்ல உக்காந்து சாப்பிடற மாதிரி அமலாபால் கேஸூவலாக சாப்பிட்டுக்கொண்டிருக்கும் ஸீனெல்லாம் தமிழுக்கு புதுசு. தனக்கு என்ன தேவை என்பதை தேர்ந்தெடுத்து செய்திருக்கிறார் அமலா. சில ஸீன்ஸ் ரிப்பீட் ஆவது படத்துக்கு மைனஸ்.

பரபரவென்று போகும் படத்தில் சட்டுன்னு க்ளைமாக்ஸ் முடித்து போகிறது. ஆனாலும்,அந்த டுவிஸ்ட் அட்டகாசம். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்ல வந்திருக்கு.

-VK சுந்தர்

Share this story