தரமான ஃபீல் குட் படம்... தனுஷ் பழமாக நடித்துள்ள 'திருச்சிற்றம்பலம்' ட்விட்டர் விமர்சனம்!

thiruchitbg

யாரடி நீ மோகினி, குட்டி ஆகிய படங்களை அடுத்து இயக்குனர் மித்ரன் ஜவஹர் உடன் தனுஷ் கூட்டணி அமைத்துள்ள படம் ‘திருச்சிற்றம்பலம்’. நடிகைகள் நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் ஆகிய மூவரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். 

மேலும் இயக்குனர் பாரதிராஜா, நடிகர் பிரகாஷ் ராஜ்  உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர்.

Thiruchit

இன்று இந்தப் படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. யாரடி நீ மோகினி, குட்டி ஆகிய படங்கள் குடும்ப ரசிகர்கள் மத்தியில் பெருவாரியாகக் கொண்டப்பட்ட பீல் குட் படங்கள். எனவே ‘திருச்சிற்றம்பலம்’ படமும் அந்த ஜானரில் தான் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. படம் ரசிகர்களை திருப்திப் படுத்தியதா என்பதை அவர்களின் விமர்சங்களை வைத்தே தெரிந்துகொள்ளலாம். 


"இப்படித்தான் நீங்கள் எந்த ஒரு க்ரிஞ்ச் தனமும் இல்லாமல் ஒரு எமோஷனல் என்டர்டெய்னர் படத்தை எடுக்கவேண்டும். எல்லாமே எளிமையாக, இயலப்பாக நேரடியானது மற்றும் சீரான இடைவெளியில் நம் மனதைக் கவர்கின்றன. தனுஷ் மீண்டும் ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன் விஐபி படத்தைப் போல நல்ல படத்தைக் கொடுத்துள்ளார்."


"3.5/5 ஒரு நல்ல ஃபீல் குட் திரைப்படம். நித்யா, இவங்கள பாத்துட்டே இருக்கலாம். தனுஷின் நடிப்பு செம. பிரகாஷ் ராஜ் நல்ல கதாபாத்திரம். ராஷி கண்ணா மற்றும் ப்ரியா பவானி ஷங்கருக்கு மின்னல் கதாபாத்திரங்கள். தனுஷ் & நித்யா, தனுஷ் & பாரதிராஜா காட்சிகள் நன்றாக இறுகின்ற்னர். அனி பாடல்கள் மற்றும் பின்னணி இசை சிறப்பு.  2வது பாதியில் சில இழுவைக் காட்சிக. க்ளைமாக்ஸ் சிறப்பு. ஃபீல் குட் திரைப்பட ஆர்வலர்கள் பார்க்க வேண்டிய படம்."


"சிம்பிள் ஃபீல் குட் லைட் ஹார்ட் என்டர்டெய்னர் திரைப்படம்

நாம் அனைத்து கதாபாத்திரங்களுடன் நம்மைத் தொடரபுபடுத்திக் கொள்ள முடிகிறது. படத்தை ரசித்து பார்க்கலாம். 

மதிப்பீடு: 3.25/5"


வேற என்ன சொல்ல, பக்கா பீல் குட் திரைப்படம். ஒரு காட்சி கூட சலிப்படையச் செய்யவில்லை. 


 


 


 


 


 

திருச்சிற்றம்பலம் அனைவரின் மனதையும் வென்று ஜெயித்துக் காண்பித்திருக்கிறார். இயக்குனரும் தான்!

Share this story