புதுசா இருக்கும்னு நினச்சு போனா ஏமாற்றம் தான்... 'விருமன்' ட்விட்டர் விமர்சனம்!

viruman-223

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 'விருமன்' திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் மூலம் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

மேலும் இந்தப் படத்தில் சூரி, பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண்,ஆர்கே சுரேஷ், மனோஜ் பாரதிராஜா, வடிவுக்கரசி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்துள்ளனர். 

முத்தையா படங்கள் என்றாலே இப்படித் தான் இருக்கும் என்று ஒரு டெம்ப்ளேட் இருக்கிறது. அது இந்தப் படத்திலும் தொடர்கிறதா இல்லையா புதுமையான கதைக்களமாக என்பதை பார்வையாளர்கள் விமர்சனங்களை வைத்து தெரிந்துகொள்ளலாம். 


"எல்லாம் சரிசமமாக கலந்த வழக்கமான கிராமத்துக் கலைக்களத்தில் உருவாகியுள்ளது விருமன். இளம் மற்றும் குடும்ப ரசிகர்கள் படத்தை ரசித்து பார்க்கலாம். கார்த்தி நன்றாக நடித்துள்ளார். படத்தில் அதிதி மிகவும் தன்னம்பிக்கையுடன் காணப்படுகிறார். தமிழ் சினிமா கண்டுபிடித்துள்ள நல்ல நடிகை. "


"அழகான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். இயக்குனர் முத்தையா தேர்ந்த திரைக்கதை எழுதியுள்ளார். வலுவான கதாபாத்திரங்கள், அருமையான நடிகர்கள் தேர்வு. உறவுகளுக்கு இடையே இருக்கும் அழகை இந்த படம் எடுத்துச் சொல்கிறது. நடிகை அதிதி சங்கர் அவருடைய கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். பிரகாஷ் ராஜின் நடிப்பு அற்புதம். யுவன் இசை நன்றாக இருந்தது."


"கார்த்திக்கு மிக மிக எளிதான கதாபாத்திரம். அதிதியின் அறிமுகம் சிறப்பாக உள்ளது. இருந்தாலும் அவருக்கான இடம் படத்தில்  குறைவாகவே இருக்கிறது. நடிகர்கள், நடிப்பு, வலுவான டயலாக்குகள் மற்றும் பாடல்கள் படத்தின் பலம். திரைக்கதை மோசமாக உள்ளது. குழந்தை கூட படத்தில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை கணித்துவிடும். படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை வழக்கமான அதே காட்சிகள். எந்த ஒரு உணர்வு பூர்வமான ஈர்ப்பும் இல்லை. கிரிஞ்ச்". 


"கார்த்தி இதுபோல காலாவதியான கதை இருக்கும் இந்த மாதிரி ஒரு படத்தில் எப்படி நடித்தார் என்று தெரியவில்லை. படத்தில் செண்டிமெண்ட் காட்சிகளுக்கு ரசிகர்கள் சிரித்துக் கொண்டிருக்கின்றனர். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மிகவும் மோசமாக உள்ளது. இயக்குனர் முத்தையா சிறிது நேரம் எடுத்து நல்ல திரைக்கதை எழுதுவதற்கான நேரம் இது."


"முத்தையாவின் வழக்கமான டெம்ப்ளேட் திரைப்படம். நல்ல முதல் பாதி, மற்றும் சுமாரான இரண்டாம் பாதி. கார்த்தி பார்ப்பதற்கு சூப்பராக உள்ளார். யுவனின் பாடல்கள் நன்றாக உள்ளன. ஆனால் படத்தின் பின்னணி இசை மாஸ்டர் படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் வரும் காட்சிகள் திரைக்கதையை இழுவையாக மாற்றியுள்ளன. B& C சென்டர் ரசிகர்கள் மத்தியில் படம் நல்ல வரவேற்பைப் பெறும் ". 


"ஒரு கண்ணியமான கிராமத்து ஆக்ஷன் திரைப்படம். கார்த்தி & பிரகாஷ் ராஜ் நடிப்பு செம. அதிதி நன்றாக நடித்துள்ளார். டான்ஸ் வெறித்தனம். சூரியின் ஒன்லைன் நகைச்சுவை நன்றாக வேலை செய்கிறது. அற்புதமான நடிப்பு. யுவனின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். சில காட்சிகள் யூகிக்கக்கூடியது. திரைக்கதை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். கிராமப்புற திரைப்பட ஆர்வலர்கள் பார்க்கக்கூடிய திரைப்படம்"


 

Share this story