பொன்னியின் செல்வன் - விமர்சனம்

எம்.ஜியார் தொடங்கி, கமல்… இன்னபிற ஆட்கள் எல்லாம் எடுக்க ஆசைப்பட்ட படம் - பொன்னியின் செல்வன்.எடுத்த முயற்சியெல்லாம் முட்டுச் சந்தோடு முடிந்து போன வரலாறு ஊரறிந்த செய்தி.அதற்கு சொல்லப்பட்ட காரணம்- படத்துக்கு தேவையான பட்ஜெட் இல்லேங்கிறது தான்.
இப்படியான சூழலில் 'லைக்கா புரடக்சன்' ஓப்பன் பட்ஜெட்டில் படத்தை தயாரிக்க முன் வந்தால் மட்டுமே, முன்னத்தி ஏர்கள் கண்ட கனவு சாத்தியமாகி… நேத்து திரைக்கு வந்திருக்கு.அம்பது வருச கனவுக்கு கைகொடுத்த லைக்காவுக்கு ஒரு 'லைக்' ப்ளஸ் ஹார்டின்.
ஒரு நாவலைப் படமாக்கும் போது, ஸ்க்ரீன் லாங்குவேஜ்க்கு ஏத்த மாதிரி; ஸ்க்ரீன் பிளேவில் மாற்றம் பண்ணுவார்கள்.மணிரத்னம் அண்ட் டீம் இந்த நாவலிலும் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள்.அது தவிர்க்க முடியாதுன்னு தெரிந்தும்,பொது வெளியில் சிலர் கொந்தளிப்பது… ஸாரி,கொஞ்சம் ஓவர்.
வந்தியத்தேவனாக வரும் கார்த்தி, ஆதித்த கரிகாலனாக வரும் விக்ரம், பொன்னியின் செல்வனாக வரும் ஜெயம் ரவி,ஆழ்வார்கடியனாக வரும் ஜெயராம்,பெரிய பழுவேட்டையராக வரும் சரத்குமார்,சுந்தரச் சோழனாக வரும் பிரகாஷ்ராஜ்,நந்தினியாக வரும் ஐஸ்வர்யாராய்,குந்தவையாக வரும் திரிஷா,சமுத்திர குமாரியாக வரும் ஐஸ்வர்யா லட்சுமி தொடங்கி… நடித்துள்ள பிரதான கதாபாத்திரங்கள் எல்லோருமே நாவலின் தன்மையை உள்வாங்கி கதைக்கு நேர்மை செய்திருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.
விக்ரம்,வேற லெவல்! முந்தைய படத்தில் விட்டதை இதில் முரட்டுத்தனமாக ஈடு செய்திருக்கிறார். அது போலவே கார்த்தியும் ரகளை பண்ணியிருக்கிறார்.ஜெயம் ரவியின் அறிமுக காட்சி அட்டகாசம்… இப்படியே சொல்லிக்கொண்டு போனால் ரிவ்யூவையும் ரெண்டு பார்ட்டா எழுதினாத்தான் உண்டு.நாவலைப் படித்துவிட்டுப் போனாலும் சரி,படிக்காமல் போனாலும் சரி உங்களுக்கு ஒரு புது அனுபவம் கிடைப்பது நிச்சயம்.
குடந்தை ஜோதிடர்,கோடியக்கரையில் வந்தியத்தேவன்,பூங்குழலி மீட்டிங் போன்ற சில முக்கியமான காட்சிகளை ஏன் நீக்கினார்கள் என்பது புரியவில்லை! கார்த்தி,பூங்குழலி இருவருக்குமான சந்திப்பை ஹாஃப் வே ஓப்பனிங்கில் காட்டியிருக்கிறார் இயக்குனர் மணிரத்னம்.ஊமைக் கிழவி கேரக்டரையும் கொஞ்சம் முன் கூட்டியே ஆடியன்ஸ்க்கு அறிமுகப் படுத்தியிருக்கலாம்! இது போல் ஆங்காங்கு சில குறைகள் இருந்தாலும், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படங்களில் இதுவும் ஒன்றாக காலத்துக்கும் பேசப்படும்.
V.K.சுந்தர்