மனித உணர்வுகளை நுட்பமாக கையாண்ட விதம் அருமை... அட்டகாசமான வெப் சீரிஸ்... 'பேப்பர் ராக்கெட்' விமர்சனம்!

இருபத்தி நாலு மணிநேரமும் பிஸியாக இருக்கிற பிஸினஸ்மேன் காளிதாஸ் ஜெயராம்.'ஊருக்கு வாப்பா… உன்னைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு.! உன்கூட ஒரு லாங் ட்ரைவ் போகணும்னு ஆசையா இருக்கு.' என்று வேண்டுகோள் வைக்கிறார் காளிதாஸின் அப்பா. பணத்தைத் துரத்தி ஓடுற சென்னை வாழ்க்கையில், அதுக்கு நேரமே இல்லாமல் போகிறது! ஒருநாள் அப்பா இறந்து போனதாக தகவல் வர ஊருக்குப் போகிறார். அப்பாவோட கடைசி ஆசையை நிறைவேத்த முடியாமப் போச்சே என்ற மன உளைச்சலால் எந்த வேலையும் பார்க்க முடியல… தூங்க முடியல!
ஒரு சைக்காட்ரிஸ்டைப் பார்க்கலாம்னு போனால், அங்கே இவரைப் போல பிரச்சினையில்ல ஐந்து பேரைச் சந்திக்கிறார். கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனால்… அங்க ரெண்டு கொடுமை… சிங்கு சிங்குச்சுன்னு ஆடுச்சாம்ன்னு ஊர்ப்பக்கம் சொல்ற மாதிரி, அவங்களுக்கு இருக்கிற பிரச்சினைகள் இன்னும் கொடூரம்!
ஒரு ரூமுக்குள்ள உட்கார்ந்து திரும்பத் திரும்ப ஒரே விசயத்தைப் பேசுறதுக்குப் பதிலா ஒரு லாங் ட்ரைவ் போகலாம் என்று எல்லோரும் கேட்க, ஹாஸ்பிடல்ல ஆள் இல்லாத நேரமாப் பார்த்து எஸ்கேப் ஆகிறார்கள். அந்த டிராவல்லில் ஒவொருத்தரோட பிரச்சினையையும் எப்படி சால்வ் பண்றாருக்கிறதுதான் ஏழு எபிஸோட்லையும் நடக்கிற கதை. ஆரம்பத்தில் டேக் ஆஃப் ஆக கொஞ்சம் டைம் எடுக்குது. கடைசி எபிசோட்டைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால்… அட்டகாசமான வெப் சீரிஸ்.
காளிதாஸ் ஜெயராம்க்குன்னே செஞ்சு வச்ச மாதிரி கேரக்டர். அலட்டிக்காமல் அட்டகாசம் பண்ணியிருக்கார். படத்தில் வர்ற இதர கேரக்டர்கள் அத்தனை பேரும் தனித்தனியாக ஸ்பேஸ் கொடுத்திருக்கிறார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி. அதிலும், உன்னி கேரக்டர்… மேரேஜ்ஜான தன்னோட பழைய காதலியை சந்திக்கிற ஸீனெல்லாம் கவிதை. ரேணுகாவின் மரணத்தைக் கொண்டாட வைக்கிற இடம் அட்டகாசம்.
மொத்த சீரிஸ்லயும் வர்ற பெண்கள் அத்தனை பேரும் பாலசந்தர் படங்களில் வரும் கேரக்டர்கள் போல் ஆளுமைகளாகவே இருக்கிறார்கள். ஒரு பிரச்சினை வந்து முடங்கிப் போனவர்களை நாலு சுவத்துக்குள்ள அடைச்சு வைக்காதீங்க…அவங்களுக்கு பிடிச்சமாதிரி இருக்க விட்டால்… வாழ்க்கையில் பட்டாம்பூச்சி பறப்பதை பார்க்கலாம் என்று அழகியலோடு சொல்லியிருக்கிறார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி. மனித உணர்வுகளை நுட்பமாக கையாண்ட விதத்துக்காகவே இயக்குனருக்கு கொடுக்கலாம் ஒரு 'பொக்கே'!
-VK சுந்தர்.