'ஆட்ட நாயகன்' யாரென்று நிரூபித்த அஜித்

thunivu

துணிவு + வாரிசு என்றும் இந்த ரிவ்யூவை ஆரம்பிக்கலாம் : அல்லது, வாரிசு + துணிவு என்றும் ஆரம்பிக்கலாம் ! எதுக்கு அப்படி ஆரம்பிக்கணும் என்று கேட்பவர்களுக்கு, முன்கூட்டியே ஒரு தகவலைச் சொல்லிக்கிறேன்… ரெண்டு நாளைக்கு முன்புவரை பொலிட்டிகள் பஞ்சாயத்து போய்க்கிட்டிருந்த மீடியாவில் - இன்னைக்கு பொங்கல் ரிலீஸ் படங்கள்தான் ஹாட் டாப்பிக்.

வருசத்துக்கு ஒருமுறை பொங்கல் வந்து போவது வழக்கம்தான்… ஆனால், ரேஸில் நிற்கும் ஹீரோக்கள் நடித்த படம் ஒரே நாளில் ரிலீஸ் ஆகுறபோது 'ஆட்டநாயகன்' யாரென்று பார்க்கிற பொங்கலாக இந்த வருசம் தொடங்கியிருப்பது தான் 2023-ன் ஸ்பெஷல்! அரசியல்ல ஆட்ட நாயகன் யாரென்பது 'மென் சிரிப்பில்' சொல்லிவிட்டார் முதல்வர்.தமிழ் நாட்டில் அரசியலும்,சினிமாவும் இரண்டு கண்கள் என்பதால் : இப்போது சினிமா!

thunivu

அஜித் - விஜய் அல்லது விஜய் - அஜித் இருவரும் நடித்த படங்கள் ஒன்பது வருசத்துக்கு அப்புறம் இன்னைக்குதான் ரிலீஸ் ஆகியிருக்கு. வாரிசு படத்தின் ஆடியோ ரிலீஸின் போது,புரொட்யூஸர் 'தில் ராஜ்' 'தில்' லாகப் பேசிய பேச்சு கோடம்பாக்கத்தை சூடாக்கிய விசயம் உங்களுக்கே தெரியும்! அதான்,அந்த 'ஆட்டநாயகன்'! அதனால ரெண்டு மூவியையும் ஒரே தராசுல தொட்டுத் தூக்க வேண்டியதாப் போச்சு!

இப்போ வாரிசு படத்தைப் பார்ப்போம்… உலகப் பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடிக்கிற அளவுக்கு தகுதியான குடும்பத்தில் நடக்கிற தொழில் போட்டிதான் ஒன்லைன். அந்த சாம்ராச்சியத்துக்கு அடுத்த வாரிசு யார் என்பதை அப்பா,சரத்குமார் டிக்ளெர் பண்ணுவதும் அதன் தொடர்ச்சியாக நடக்கிற 'டாம் அண்ட் ஜெரி' ஆட்டம்தான் ஃபுல் மூவி.

thunivu and varisu

விஜய் பிரமாதமாக டான்ஸ் ஆடுவார். ஃபைட் பண்ணுவார்.காமெடி பண்ணுவார்.ரொமான்ஸ் பண்ணுவார். க்ளோஸ் அப் ஷாட்டில் பஞ்ச் டயலாக் பேசுவார் தொடங்கி, இன்னபிற என்னெல்லாம் பண்ணுவாரோ… அது எல்லாமே வாரிசுலயும் இருக்கு. 'டேபிள் மேனர்ஸ்'ன்னு ஒரு வார்த்தை இருக்கு : என்ன கேரக்டர் பண்றமோ அதுக்கு : அந்த இடத்துக்கு நேர்மையா இருக்கணும்! அது இல்லாமல் போனதுதான் படத்தின் ஆகப் பெறும் மைனஸ்! தவிர, விஜய் ஹீரோ என்பதற்காகவே அவருக்கு எல்லா சீக்ரெட்டும் அவர் உள்ளங்கையில் வைத்திருக்கிறார் என்பதெல்லாம் ஸ்க்ரீன் பிளேவின் உச்சக்கட்ட அபத்தம்.'சூர்யவம்சம்' 'மிஸ்டர் பாரத்' 'புஷ்பா' தொடங்கி ஏகப்பட்ட படங்களை மறுபடியும் தொலைக்காட்சி சீரியல் வடிவில் பார்க்கிற மாதிரியே இருக்கு படம் முழுக்க! அதுபோக, வழக்கம்போல ரொமான்ஸ்/சாங் அதெல்லாம் வைக்கணுமே என வைத்திருக்கும் காட்சிகள் கதைக்கு தேவையில்லாத ஸ்பீட் பிரேக்.

thunivu

அஜித்தும் இந்த மாதிரி பல படங்களில் ஸ்பீட் பிரேக் போட்டிருக்கிறார் என்பதையும் மறுக்க முடியாது. 'துணிவு' அந்த வரிசையில் இல்லை என்பதுதான் படத்தின் சிறப்பு ! ஒரு ஆக்ஸன் கதைக்கு என்னவெல்லாம் தேவையோ அதை மட்டும் ஏற்றுக்கொண்டு 'அதகளம்' பண்ணியிருக்கார்.அஜித் ரசிகர்கள்,அவரை ஸ்க்ரீனில் என்னவாகப் பார்க்க வேண்டும் என்று விருப்புவார்களோ அதைத் 'துணிவு' டன் கொடுத்திருக்கிறார். படம் தொடங்கி… எண்டு கார்ட் போடுகிறவரை என்கேஜ்டாக இருக்கிறது.

V.K.சுந்தர்

Share this story