ரெட்ரோ படத்தில் 20 ஆக்ஷன் காட்சிகள்...!

சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தில் 20 ஆக்ஷன் காட்சிகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படம் லவ் வித் ஆக்ஷன் கதையில் உருவாகி உள்ளது. மே ஒன்றாம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டிரைலரை வெளியிட்டு அடுத்தடுத்து பிரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் ரெட்ரோ படம் குறித்து தற்போது அப்படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர், எடிட்டர் உள்ளிட்ட டெக்னீஷியன்களும் சில தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த செய்தியில், இந்த படத்தில் மொத்தம் 20 ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோன்று இப்படத்தில் சூர்யாவின் ஓப்பனிங் சீன் ரொம்ப புதுமையாக இருக்கும் என்றும், மாறுபட்ட கெட்டப்பில் பல மாஸான சீன்களில் சூர்யா நடித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், ரெட்ரோ படத்தின் கிளைமாக்ஸ் யூகிக்க முடியாத வகையில் இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.