நாளை ரீ ரிலீஸ் உட்பட 5 படங்கள் திரைக்கு வருகிறது!

ச்

துல்கர் சல்மானின் காந்தா, ஆனந்தராஜின் மதராஸ் மாஃபியா கம்பெனி, சேரனின் ஆட்டோகிராப் (ரீ ரிலீஸ்), சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள கிணறு, தாவுத் ஆகிய படங்கள் நாளை திரைக்கு வருகிறது. 

மதராஸ் மாஃபியா கம்பெனி' படத்தின் ட்ரெய்லர் வெளியானது | தமிழன்

கோலிவுட்டில் நாளை ரீ ரிலீஸ் திரைப்படங்கள் உட்பட ஐந்து படங்கள் திரைக்கு வர வருகிறது. அந்த வகையில், செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், ராணா, சமுத்திரக்கனி நடிப்பில் காந்தா என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. பீரியட் படமாக உருவாகியுள்ள காந்தா இவருக்கு இடையில் நடைபெறும் ஈகோவை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு 
ஜானு சந்தர் இசையமைத்துள்ளார். இப்படத்தினை நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் ராணா இணைந்து தயாரித்துள்ளனர். பழம்பெரும் நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக பாகவதரின் பேரன் வழக்கு தொடர்ந்து உள்ள நிலையில், இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனங்கள் பதிலளிக்க வேண்டும் எனக் கூறி இதன் விசாரணையை நவம்பர் 18ம் தேதி தள்ளி வைத்துள்ளது நீதிமன்றம்.

Image

குழந்தைகளை மையப்படுத்தி அறிமுக இயக்குநர் ஹரிகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கிணறு- The Well. விவேக் பிரசன்னா மற்றும் நான்கு புதுமுக சிறுவர்கள் இதில் நடித்துள்ளனர். இப்படத்தை மெட்ராஸ் ஸ்டோரிஸ் என்ற நிறுவனம் சார்பில் சூர்யா நாராயணன் மற்றும் வினோத் சேகர் தயாரித்துள்ளனர். இதற்கு புவனேஷ் செல்வநேசன் இசை அமைத்துள்ளார். ஒரு கிராமத்தில் 4 சிறுவர்கள், அருகிலுள்ள வீட்டுக் கிணற்றில் விளையாடுவதற்காகச் செல்கிறார்கள். அங்கு அவர்கள் அவமானப்படுத்தப்படுவதை அடுத்து, தங்களுக்காகவே ஒரு கிணறு தோண்ட முடிவு செய்கிறார்கள். ஆனால், மூத்த தலைமுறையின் நம்பிக்கைகள் மற்றும் தடைகள் அவர்களின் முன்னே நிற்கின்றன. நிலத்தில் தண்ணீர் தேடும் அறிவு, கருவிகளுக்கான சேமிப்பு, பெரியவர்களை நம்ப வைப்பது, பயத்தைத் தாண்டி கனவு நோக்கி ஓடும் சிறுவர்களின் பயணமாக இப்படம் உருவாகியுள்ளது. பல சர்வதேச விருதுகளை பெற்றுள்ள இப்படம் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நாளை திரைக்கு வருகிறது.

Director Seenu Ramasamy releases the trailer of Hari Kumaran's "Kinaru" |  ஹரி குமரனின் “கிணறு” படத்தின் டிரெய்லரை வெளியிட்ட இயக்குநர் சீனு ராமசாமி

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில் சேரன் தயாரித்து, இயக்கி, நடித்த 2004 ஆம் ஆண்டு வெளியான ஆட்டோகிராப் படம் நாளை மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சேரனுடன் சினேகா, கோபிகா, கனிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்திற்காக தேசிய விருதும் இப்படம் பெற்றிருந்தது. 21 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் திரைக்கு வரும் இப்படம் தமிழகத்தில்120க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. அறிமுக இயக்குனர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மதராஸ் மாஃபியா கம்பெனி. வடசென்னை பின்னணியில் உருவாகி உள்ள இந்த படத்தில் ஆனந்தராஜ் தாதா வாக நடித்துள்ளார். மேலும் சம்யுக்தா, முனிஷ்காந்த், தீபா, ஷகீலா, ராம்ஸ், ஆனந்த் பாபு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாளை இப்படனும் திரைக்கு வருகிறது. அறிமுக இயக்குனர் பிரசாந்த் ராமன் இயக்கத்தில், உடன்பால், பென்குயின், சேதுபதி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த லிங்கா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் தாவுத் திரைப்படமும் நாளை திரைக்கு வருகிறது. பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள கும்கி 2 திரைப்படம் நாளை திரைக்கு வர இருந்த நிலையில் நீதிமன்றம் படத்திற்கு தடை விதித்துள்ளதால் இப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Share this story