‘தல’யா? தளபதியா? – சிவா மனசுல யாரு?

‘தல’யா? தளபதியா? – சிவா மனசுல யாரு?

ஒளிப்பதிவில் தொடங்கிய சிவாவின் திரையுலக வாழ்க்கையில் இத்தனை ஒளிவீசுமென்று அவரே நினைத்து பார்த்திருக்க மாட்டார். முன்னணி நடிகர்களுடனேயே தொடர்ந்து வொர்க் பண்ணிட்டு வர்றார்.

தாத்தா ஏ.கே. வேலன் கதாசிரியர் தயாரிப்பாளர். தனது தந்தை அருணாசலம் பிள்ளை பெயரிலேயே ‘அருணாசலம் ஸ்டூடியோவை’நிறுவியவர். அப்பா சிவக்குமார் ஆவணப்பட இயக்குநர். இப்படி சினிமா பின்னணியில் இருந்து வந்தாலும் தனித்திறமையால் இன்று தனித்து நிற்கிறார் சிவா.

‘தல’யா? தளபதியா? - சிவா மனசுல யாரு?
‘தல’யா? தளபதியா? – சிவா மனசுல யாரு?

அடையாறு திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவு படித்த சிவா, ’மனசெல்லாம்’ படத்தின் மூலமாக ஒளிப்பதிவாளர் ஆனார். அடுத்து தெலுங்கில் நாகார்ஜூன் நடித்த படங்களூக்கு ஒளிப்பதிவு செய்தவர், கோபிசந்த் நடித்த படத்தின் மூலமே இயக்குநர் ஆனார்.

தமிழில் சிறுத்தை படத்தின் மூலம் இயக்குநர் ஆன சிவா, அப்படத்தின் வெற்றியினால் ‘சிறுத்தை’சிவா என்றே அறியப்படுகிறார்.

‘தல’யா? தளபதியா? - சிவா மனசுல யாரு?
‘தல’யா? தளபதியா? – சிவா மனசுல யாரு?

வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என்று அஜீத்துடன் தொடர்ந்து இயங்கிய சிவா, உச்சநட்சத்திரமான ரஜினியுடன் ’அண்ணாத்த’ படத்தில் இருக்கிறார்.

வீரம் படத்தில் நடித்த சிவாவின் தம்பி ‘அன்பு’பாலா, அண்ணாத்த படத்திலும் நடிப்பதாக தகவல்.

‘தல’யா? தளபதியா? - சிவா மனசுல யாரு?
‘தல’யா? தளபதியா? – சிவா மனசுல யாரு?

சிவாவின் கால்ஷீட்டுக்காக சூர்யா, விஜய், ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜுன் எல்லோரும் காத்திருக்கிறார்கள். அஜீத்துடன் மீண்டும் இணையப்போவதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது. விஜய்க்காக ஒரு பக்கா கமர்ஷியல் கதையும் தயாராக வைத்திருக்கிறாராம் சிவா. சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல்.

அண்ணாத்த படத்த முடித்துவிட்டு, தெலுங்கில் ஒரு படம் பண்ணிவிட்டுத்தான் தமிழுக்கு வருகிறார். அப்படி வரும் பட்சத்தில் அவர் முதலில் இயக்கப்போவது ’தல’யா? தளபதியா?ன்னு தெரியவில்லை. சிவா மனசுல யாரு?

Share this story