5 நாட்களில் ரூ.100 கோடி வசூல்! ‘குபேரா’ சாதனை

உலகளவில் ரூ.100 கோடி வசூலை குவித்துள்ளது நடிகர் தனுஷின் ‘குபேரா’ திரைப்படம்.
தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி ஜூன் 20ஆம் தேதி வெளியாகியுள்ள படம் குபேரா. இந்த படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தெலுங்கு மற்றும் தமிழில் நேரடியாக உருவாகி மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக வெளியானது. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் பெரும்பாலும் பாசிடிவான விமர்சனத்தையே கொடுத்து வருகிறார்கள். வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்துள்ளன.
குபேரா படம் வெளியாகி 5 நாட்களே ஆன நிலையில், உலகளவில் ரூ.100 கோடி வசூலை வாரி குவித்துள்ளது. இதனை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.