பிரபல நடிகரின் வீடு ஜப்தி... தவிக்கும் மனைவி

ச்

பழம்பெரும் நடிகர் ராஜசேகரனின் இல்லம் ஜப்தி செய்யப்பட்டுள்ளது.

Rajashekar Vijay TV

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமடைந்த நடிகர் ராஜசேகர். ராஜசேகர் நடிகர் மட்டுமல்ல...  இயக்குனர், ஒளிப்பதிவாளர் என்று பன்முக திறமையோடு திகழ்ந்து வந்தார். இவர்,  கடந்த 2019 ஆம் ஆண்டு உடல்நிலை குறைவால் காலமானார். ராஜசேகர் இறப்பதற்கு சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் வடபழனியில் லோன் போட்டு வீடு ஒன்றை வாங்கி இருந்தார். ஆனால் அந்த வீட்டில் குடியேறுவதற்கு முன்பு அவர் இறந்துவிட்டார்.

நடிகர் ராஜசேகரின் மனைவி தாரா குடியிருந்த வடபழனியில் உள்ள வீட்டினை, ஹவுசிங் லோனை கட்டாததால் நீதிமன்றம் ஜப்தி செய்துள்ளது. 2019ல் ராஜசேகர் இறந்த பிறகு ஹவுசிங் லோன் கட்ட முடியாமல் தவித்த மனைவி தாராவை வீட்டிலிருந்து நீதிமன்ற ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், காவல்துறையினர் வெளியேற்றினர். இதனால் யார் உதவியும் இல்லாமல் தன்னிந்தனியே தவிப்பதாக ராஜசேகர் மனைவி தாரா வேதனை தெரிவிக்கிறார்.

Share this story