"நாற்பது வயதிலேயே தனக்காக கல்லறை கட்டிய ராஜேஷ்" -அடக்கம் செய்யப்பட்ட நடிகர் ராஜேஷின் உடல்

Rajesh

தமிழ் சினிமாவில் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகர் ராஜேஷ் சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் காலமானார் .இவரின் உடலுக்கு பல நடிகர்கள் ,மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர் .பிரபல நடிகர் ரஜினிகாந்த் முதல் தமிழக  முதல்வர் வரை நேரில் சென்று ராஜேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்
இந்நிலையில் அவரின் பேட்டி ஒன்று சமூக ஊடகத்தில் வைரலானது .அதில் அவர் தான் ரஷ்யா சென்றபோது சில தலைவர்களின் கல்லறையை பார்த்ததாகவும் ,அதனால் அதை போல் தானும் தனக்கு நாற்பது வயதிலேயே கல்லறை கட்டி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார் .மேலும் அவர் கூறுகையில் உயிரோடு இருக்கும்போது ஒருவர் தனக்கு கல்லறை கட்டினால் அவர் நூறு வயது வாழ்வார்கள் என்று ஒரு சீன பழமொழி உள்ளது என்றும் ,ஆனால் தான் அதற்காக கட்டவில்லை என்றும் கூறினார் .
இந்நிலையில் மறைந்த நடிகர் ராஜேஷின் உடல் நேற்று கீழ்ப்பாக்கத்தில் அவர் கட்டிய கல்லறையில் அவரின் உறவினர்கள் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது .

Share this story