‘Mrs & Mr’ படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரை வெளியிட்டார் நடிகர் ரஜினிகாந்த்

அச்

வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகியுள்ள 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் நடிகர் விஜயகுமாரின் பெண் வனிதா. அதன்பின் மாணிக்கம் படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதனையடுத்து சிறு சிறு வேடங்களில் நடித்த வனிதா, பிரசாந்த் நடித்த அந்தகன் படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்திருந்தார். 

இந்நிலையில் வனிதா விஜயகுமார் தற்போது 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தை இயக்கி, தயாரித்து நடித்துள்ளார். இந்த படத்தை மறைந்த நடிகையான தனது தாயார் மஞ்சுளாவின் பிறந்தநாளையொட்டி ஜூலை 4-ம் தேதி வெளியிடுகிறார். இதனையடுத்து தனது மகள் ஜோவிகா மற்றும் படக்குழுவினருடன் ரஜினிகாந்த்தை பெற்ற வனிதா விஜயகுமார், படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

Share this story