கில்லர் படப்பிடிப்பில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா படுகாயம்
நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் எஸ்.ஜே சூர்யா இயக்கி நடிக்கும் கில்லர் திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் விபத்துக்குள்ளானது.

சென்னை பாலவாக்கத்தில் இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நேற்று நடைபெற்று வந்த நிலையில், ரோப் கயிறு உதவியுடன் சண்டைக் காட்சியில் நடித்து வந்த எஸ் ஜே சூர்யா எதிர்பாராத விதமாக இரும்பு கம்பியில் மோதி விபத்துக்குள்ளானார். கம்பி மீது விழுந்ததில் இரண்டு கால்களிலும் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு இரண்டு தையல்கள் போடப்பட்டுள்ளது.
சிகிச்சைக்கு பிறகு 15 நாட்களுக்கு ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விபத்தின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

