"9 வருஷம் எப்படியோ தாக்கு புடிச்சிட்டேன்... இன்னும் 2 மாசம் தானே"... கல்யாணம் குறித்த கேள்விக்கு விஷால் கொடுத்த பதில்
ஆகஸ்ட் 29 ஆம் தேதி என் பிறந்தநாள் அன்று முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.
ரெட் ஃப்ளவர் பட விழாவில் உரையாற்றிய நடிகர் விஷால், “இனி வருங்காலங்களில் ஒரு படம் ரிலீஸ் ஆகும் முதல் 3 நாட்கள் மட்டும், அதாவது 12 காட்சிகளுக்கு தியேட்டர் வளாகத்திற்குள் ரிவியூ என்ற பெயரில் பேட்டிகள் எடுக்க, யாரையும் அனுமதிக்க வேண்டாம் என தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் அதிபர்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். ஒன்பது வருடங்கள் தாக்கு பிடித்துவிட்டேன் இன்னும் இரண்டு மாதங்கள்தான். ஆகஸ்ட் 29 ஆம் தேதி என் பிறந்தநாள் அன்று கண்டிப்பாக ஒரு நல்ல செய்தி உள்ளது. நான் சொன்னபடி, நடிகர் சங்க கட்டடம் தயாரானதும் முதல் திருமணம் என்னுடையதுதான். நடிகர் சங்க வளாகத்தில் புது கட்டடம் கட்டி முடிக்கப்பட்டதும் இன்னும் 2 மாதத்தில் என் திருமணம் நடக்கும். கட்டட பணிகளை விரைவில் முடிக்க தினமும் ஓடிக்கொண்டு இருக்கிறேன்” என்றார்.

