இயற்கைக்கு இத்தனை அவசரம் ஏன் ? – திமுக தலைவர் ஸ்டாலின்…

இயற்கைக்கு இத்தனை அவசரம் ஏன் ? – திமுக தலைவர் ஸ்டாலின்…

பல சாதனைகளை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் படைத்த நடிகர் விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாக ஏன் பறித்துக் கொண்டதோ என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சின்னக் கலைவாணர் என ரசிகர்களால் அன்போடு அழைக்கும் விவேக்கின் மறைவு செய்தி, பேரதிர்ச்சி அளிக்கிறது. பன்முக திறமைக்கொண்ட விவேக் தனது தனித்துவமான நடிப்பின் மூலம், நகைச்சுவையுடன் விழிப்புணர்வையும் மக்களுக்கு ஏற்படுத்தி வந்தார்.

இயற்கைக்கு இத்தனை அவசரம் ஏன் ? – திமுக தலைவர் ஸ்டாலின்…

மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்ற அவர், தலைவர் கலைஞரிடம் தனி அன்பு கொண்டிருந்தார். மரம் நடுதல் போன்ற சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தவர். இன்னும் பல சாதனைகளை செய்ய ஆற்றல் படைத்த அவரை, இயற்கை இத்தனை அவசரமாக ஏன் பறித்துக் கொண்டதோ என கூறியுள்ளார்.

இயற்கைக்கு இத்தனை அவசரம் ஏன் ? – திமுக தலைவர் ஸ்டாலின்…

அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர், என அனைவருக்கும் திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளார்.

Share this story