“வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க”- நடிகை மதுபாலா

ச்

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க என நடிகை மதுபாலா பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

madhu

தமிழ் சினிமாவில் சிறப்பாக நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை மதுபாலா. இவர் நடிப்பில் ரோஜா, ஜென்டில்மேன் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட்டடித்துள்ளன. ஏராளமான படங்கள் நடித்துள்ள மதுபாலா, போதிய வாய்ப்பின்மையால் சினிமாவை விட்டு ஒதுங்கினார். இதையடுத்து கடந்த 2012ம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவான வாயை மூடி பேசவும் படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு சில படங்களில் நடித்துள்ளார். அண்மையில் அருள்நிதியின் ‘தேஜாவு’ படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மதுபாலா  நடித்தார்.

இந்நிலையில் அண்மையில் செய்தி சேனல் ஒன்றிற்கு நடிகை மதுபாலா அளித்த பேட்டியில், “பல வருடங்களுக்கு முன் ஒரு திரைப்படத்தில் நடித்தபோது முன் கூட்டியே என்னிடம் சொல்லாமல் உதட்டோடு உதடு முத்தக்காட்சி ஒன்றில் நடிக்க சொன்னார்கள். என்னை அந்த காட்சியில் நடிப்பதற்கு சம்மதிக்க வைக்க என்னிடம் பல மணி நேரம் பேசி அந்த முத்தக்காட்சி படத்தில் எந்தளவுக்கு அவசியம் என விளக்கினார்கள். அதன் பின் தர்ம சங்கடத்தோடு அந்த காட்சியில் நடித்தேன். ஆனால் அந்த காட்சி தேவையில்லை என எடிட்டிங்கில் நீக்கிவிட்டார்கள்” எனக் கூறியுள்ளார்.

Share this story