இருமொழிகளில் வெளியாகும் சோனியா அகர்வாலின் ஹாரர் படம். ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீடு!
நடிகை சோனியா அகர்வால் இருமொழிகளில் நடித்துள்ள ஹாரர் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
முன்னணி நடிகையாக இருந்த சோனியா அகர்வால் நீண்ட நாட்களாக படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இதையடுத்து பட வாய்ப்புகளும் அவரை தேடி மீண்டும் வர தொடங்கியுள்ளன.
இந்நிலையில் தற்போது புதிய ஹாரர் படம் ஒன்றில் நடித்து வருகிறார் சோனியா அகர்வால். கிராண்மா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் லீட் ரோலில் சோனியா அகர்வால் நடித்து வருகிறார். இவருடன் சீதா சிவதாஸ், தேம்நாத் மேனன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
சஜின்லால் இயக்கும் இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளில் உருவாகி வருகிறது. விறுவிறுப்பாக ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் கொரானா காரணமாக தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இதனை நடிகைகள் மஞ்சுவாரியார் மற்றும் விமலா ராமன் ஆகிய இருவரும் வெளியிட்டுள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு சோனியா அகர்வால் படம் வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.