ஹாலிவுட்டில் களமிறங்கும் அஜித்?

ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ், F1 படங்களின் அடுத்த பாகங்களில் நடிக்க விரும்புவதாக நடிகர் அஜித் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருந்து வருபவர் அஜித்குமார். இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி, வெளிநாடுகளில் நடைபெறும் கார் ரேஸிலும் ஈடுபட்டுவருகிறார். நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இப்படம் சுமார் ரூ. 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
தற்போது பிரான்சில் நடந்து வரும் கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேசிங் அணி பங்கேற்றுள்ளது. கார் பந்தயதுக்கு நடுவே ஆங்கில சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் அஜித்திடம், தொகுப்பாளர் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் போன்ற படங்களில் நடிப்பதற்கு உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா எனக் கேட்டார். அதற்கு அஜித் குமார், “Why Not”... ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் மாதிரியான படங்களில் நடிப்பதற்கு ஆசை, பொதுவாகவே நான் நடிக்கும் படங்களில் நிறைய ஸ்டண்ட் காட்சிகள் செய்வேன் என தெரிவித்துள்ளார். ஆகவே படக்குழுவிடமிருந்து அழைப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன் என்றும் நடிகர் அஜித் குமார் எளிமையாக பதிலளித்துள்ளார்.