அஜித் ரசிகர்களுக்கு #AK64 குறித்த அசத்தல் அப்டேட்!
1750328284242

அஜித் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட' AK 64 படத்தின் படப்பிடிப்பு 2025 அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
விடாமுயற்சி படத்தை தொடர்ந்து, தல அஜித்தின் 63வது படத்தை மார்க் ஆண்டனி படம் மூலம் பிரபலமான இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்குகிறார். இதனைதொடர்ந்து, ஏகே 64 குறித்த சூப்பர் தகவல் வந்துள்ளது. இப்படத்தை வெற்றிமாறனின், எல்ரெட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் GBU படத்தில் பணியாற்றியவர்கள் இப்படத்திலும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, சுப்ரீம் சுந்தர் சண்டை இயக்குநராக பணிபுரிய உள்ளார். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.