பெற்றோருடன் கோவிலுக்கு சென்ற தல அஜித் !

பெற்றோருடன் கோவிலுக்கு சென்ற தல அஜித் !

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவர் அஜித் குமார்.
இவரை தல என அவரது ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள்.
கடந்த 2019ம் ஆண்டு அவரது நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்றது.

பெற்றோருடன் கோவிலுக்கு சென்ற தல அஜித் !


இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்போது அவர் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.இந்த படத்தை தொடர்ந்து அவர் சூரரைப்போற்று திரைப்படத்தை இயக்கிய சுதாகொங்காராவின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும், அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெற்றோருடன் கோவிலுக்கு சென்ற தல அஜித் !

இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் அஜித் குமார் தனது பெற்றோர்களுடன் கோவிலிலிருந்து வெளியே வருவது போன்ற ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் வழக்கம் போல அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

பெற்றோருடன் கோவிலுக்கு சென்ற தல அஜித் !

வலிமை படத்தின் படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கும் நடிகர் அஜித்குமார் தற்போது பெற்றோர்களுடன் இருப்பதைப்போன்ற இந்த புகைப்படம் ரசிகர்களை குஷியாகியுள்ளது.

Share this story