கூலி படத்தில் என் கதாபாத்திரம் சுவாரஸ்யமானது- நடிகர் அமீர்கான்

இப்போதான் நிம்மதியாக இருக்கிறது..- பாலிவுட் நடிகர் அமீர்கான்..

கூலி படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சுவாரஸ்யமாக ஈருக்கும், நிச்சயம் எல்லோரும் அதை விரும்புவார்கள் என நடிகர் அமீர்கான் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கூலி. இப்படத்தில்  சத்யராஜ், நாகர்ஜூனா, செளபின் ஷாஹிர், சுருதிஹாசன் ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். கூலி படத்தில் நடித்தது குறித்து ஹிந்தி ஊடகத்திற்கு  சமீபத்திய பேட்டி ஒன்றில் அமீர்கான், கூலி படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மிகவும் சுவாரஸ்யமானது. உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.

Share this story