ஆகஸ்ட் 23ல் நடக்கிறது அனிருத்தின் இசைகச்சேரி

aniruth-34

இசையமைப்பாளர் அனிருத்தின் இசைகச்சேரி வரும் ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி கூவத்தூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

anirudh

மியூசிக் டைரக்டர் அனிருத் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரின் இசையில் பல ஹிட் பாடல்கள் கொடுத்துள்ளார். இவர் இசையமைத்த முதல் திரைப்படம் 3 ஆகும். இந்த 3 திரைப்படத்தின் வொய் திஸ் கொலவெறி டி என்ற பாடலின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். இவரது இசை பயணத்தின் தொடக்கத்தில் தனுஷ் நடித்த அல்லது தயாரித்த படங்களுக்கு மட்டுமே இசை அமைத்து வந்த இவர், தற்போது மற்ற படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இவர் சமீபத்தில் இசையமைத்த ஜெயிலர் ,விக்ரம் ,இந்தியன் 2 போன்ற படங்களின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் புகழ் பெற்றன. இந்நிலையில் ரசிகர்களின் விருப்பத்துக்காக மேடை இசை நிகழ்ச்சியை நேரடியாக நடத்தி, அவர்களை உற்சாகப்படுத்த அனிருத் திட்டமிட்டார்.

சர்வதேச அளவிலான அவரது இசைப் பயணம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வரும் நிலையில், இசையமைப்பாளர் அனிருத்தின் இசைகச்சேரி  ‘ஹூக்கும்’ என்ற பெயரில் வரும் ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி கூவத்தூரில்   நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஜூலை 26 ம் தேதி நடக்க இருந்ததாக அறிவிக்கப்பட்டு பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


 

Share this story