நடிகராகக் களமிறங்கும் மற்றொரு இசையமைப்பாளர்!

நடிகராகக் களமிறங்கும் மற்றொரு இசையமைப்பாளர்!

தற்போது திரைக்குப் பின்னாடி பணியாற்றியவர்களும் திரைக்கு முன் நடிகர்களாக மாறத் துவங்கியுள்ளனர். இயக்குனர்கள் பலரும் நடிகர்களாக மாறி வருகின்றனர்.

இசையமைப்பாளர்களாக இருந்து நடிகர்களாக மாறி வெற்றி பெற்றவர்கள் வரிசையில் ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி, ஹிப்ஹாப் ஆதி இவர்களைக் கூற முடியும்.

நடிகராகக் களமிறங்கும் மற்றொரு இசையமைப்பாளர்!

அந்த வரிசையில் தற்போது வந்தா மல, ஏமாலி, நுங்கம்பாக்கம் போன்ற பல படங்களுக்கு இசையமைத்த ஷாம் டி ராஜ் நடிகராக அறிமுகமாவுள்ளார். கால் டாக்ஸி என்ற படத்தை இயக்கிய பா.பாண்டியன் என்பவர் அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் ஷாம் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

சஸ்பென்ஸ் க்ரைம் திரில்லர் படமாக உருவாக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தின் மற்ற நடிகர்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story