பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கானின் ‘சித்தாரா ஜமீன் பார்’ படத்தின் தமிழ் டிரைலர் ரிலீஸ்!
1749778208000

அமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள "சித்தாரே ஜமீன் பர்" திரைப்படம் ஜூன் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை இயக்கியிருப்பவர் பிரசன்னா என்பவர். இவர் தமிழில் "கல்யாண சமையல் சாதம்" படத்தை இயக்கியவர்.
ஆமிர்கான் இயக்கத்தில் வெளியான ‘தாரே ஜமீன் பார்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் டிரைலர் தற்போது வெளியாகி கவனம் பெற்றுள்ளது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கூடைப்பந்து அணி ஒன்றை உருவாக்கி, அதை போட்டியில் வெற்றிபெற வைக்கு பயிற்சியாளராக அமீர்கான் இந்த படத்தில் நடித்துள்ளார்.