‘வலிமை’ படத்தின் தமிழக தியேட்டர் உரிமையைக் கைப்பற்றியது இவங்க தான்!

‘வலிமை’ படத்தின் தமிழக தியேட்டர் உரிமையைக் கைப்பற்றியது இவங்க தான்!

‘வலிமை’ படத்தின் தமிழக தியேட்டர் வெளியீட்டை உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் கோபுரம் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன.

வரும் ,மே 1-ம் தேதி அஜித்தின் 50-வது பிறந்தநாள் அன்று வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் அப்டேட்கள் வெளியாக உள்ளது. அதற்காக அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து கோலிவுட் ரசிகர்களும் மிகவும் ஆவலாக எதிர்பார்த்து வருகின்றனர்.

படத்தின் இயக்குனர் எச். வினோத் என்பதால் படம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையும் ரசிகர்களிடத்தில் அதிகம் நிலவி வருகிறது. வலிமை படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

‘வலிமை’ படத்தின் தமிழக தியேட்டர் உரிமையைக் கைப்பற்றியது இவங்க தான்!

தற்போது வலிமை படத்தின் தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய நிறுவனங்களை போனி கபூர் அதிகபரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “வலிமை படத்தின் தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸின் ராகுல் மற்றும் கோபுரம் சினிமாஸ் ஆகியோருக்கு வழங்கியுள்ளோம் என்பதைப் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

வலிமை படத்தில் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். கன்னட நடிகர் கார்த்திகேயா இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். நாளுக்கு நாள் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது. படத்தின் இறுதி வடிவத்தைப் பார்த்த அஜித் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அப்போ கோலிவுட்ல மே 1-ம் முதல் தல திருவிழா தான்!

Share this story